எட்ஜ்பாஸ்டன் டெஸ்ட் போட்டியின் நான்காம் நாளில் இந்தியா ஆதிக்கம் செலுத்தியது, இங்கிலாந்து டிரஸ்ஸிங் ரூமில் இருந்த பேச்சையே மாற்றியமைத்துள்ளது. "நாளை ஒரு டிரா செய்தாலே எங்களுக்கு நல்ல முடிவுதான்" என்று இங்கிலாந்து அணியின் உதவிப் பயிற்சியாளர் மார்கஸ் டிரெஸ்கோத்திக் ஒப்புக்கொண்டார். இது, 24 மணி நேரத்திற்கு முன்பு துணை கேப்டன் ஹாரி புரூக் "இந்தியா என்ன இலக்கு வைத்தாலும் அதை நாங்கள் துரத்துவோம் என்பது உலகத்திற்கே தெரியும்" என்று கூறியதற்கு முற்றிலும் முரணாக இருந்தது.
நேற்றைய போட்டியின் முடிவில் இப்போது இங்கிலாந்து டிரா என்பதை ஒரு நல்ல முடிவாக ஏற்றுக்கொள்ளுமா என்று கேட்டபோது, "கண்களை மூடிக்கொண்டு வெற்றியை மட்டும் துரத்த நாங்கள் முட்டாள்கள் அல்ல. "நிலைமை மாறும்போது, நிச்சயமாக டிரா ஒரு நல்ல முடிவுதான். நீங்கள் ஒரு போட்டியை டிரா செய்ய முடியும் என்ற நிலைக்கு வரும்போது, நிச்சயமாக அது ஏற்றுக்கொள்ளப்படும். வெற்றி அல்லது தோல்வி என்று மட்டுமே சிந்திக்க நாங்கள் முட்டாள்கள் அல்ல. நீங்கள் விளையாடும் ஒவ்வொரு போட்டியிலும் மூன்று முடிவுகள் சாத்தியம். ஆனால், நாங்கள் எங்கள் காலத்தில் நாங்கள் இதற்கு முன்பு செய்யாத சில காரியங்களைச் செய்துள்ளோம்," என்று டிரெஸ்கோத்திக் மேலும் தெரிவித்தார்.
ஒவ்வொரு முறையும் நாங்கள் விளையாட செல்லும்போது, போட்டிகளில் வெற்றி பெற வீரர்களுக்கு சிறந்த வாய்ப்பை வழங்க முயற்சிக்கிறோம். அப்படி செய்ய முடியாவிட்டால், நாங்கள் அதற்கேற்ப மாற்றிக்கொண்டு, அடுத்த என்ன செய்ய போகிறோம் என்று திட்டமிடுகிறோம்," என்றும் அவர் விளக்கமளித்தார்.