இதையடுத்து அவர் 19 வயதுக்குட்பட்டோருக்கான அணியில் சேர்க்கப்பட்டு இங்கிலாந்துக்கு சென்றுள்ளார். இங்கிலாந்து அணிக்கு எதிரான நான்காவது போட்டியில் குறைந்த பந்துகளில் சதமடித்த வீரர் என்ற சாதனையை அவர் படைத்துள்ளார். இந்த போட்டியில் 52 பந்துகளில் சதமடித்த அவர் 78 பந்துகளில் 143 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தார். இதன் மூலம் சர்வதேசக் கிரிக்கெட் அரங்கில் வெகு விரைவாகவே சூர்யவன்ஷி அறிமுகமாகி கலக்குவார் என்ற நம்பிக்கை எழுந்துள்ளது.
தன்னுடைய இன்னிங்ஸ் குறித்து பேசியுள்ள சூர்யவன்ஷி “200 ரன்கள் அடிப்பதுதான் எனது இலக்கு. அடுத்த போட்டியில் முழு இன்னிங்ஸும் அவுட் ஆகாமல் நிற்பேன். நான் எவ்வளவு நேரம் களத்தில் உள்ளேனோ, அது அணிக்கு நல்லது.” எனப் பேசியுள்ளார்.