கடந்த சில நாட்களாக மகளிர் பிரிமியர் லீக் கிரிக்கெட் போட்டிகள் நடைபெற்று வருகின்றன. இந்த நிலையில், நேற்று நடந்த போட்டியில் உத்தரப்பிரதேச அணியை வீழ்த்தியதால், டெல்லி அணி புள்ளி பட்டியலில் இரண்டாம் இடத்தை பெற்றுள்ளது.
இதனை தொடர்ந்து, 167 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற நிலையில் களமிறங்கிய டெல்லி அணி, 19.5 ஓவரில் 167 ரன்கள் எடுத்து திரில்லிங் வெற்றி பெற்றது. கேப்டன் லான்னிங் அபாரமாக விளையாடி 69 ரன்கள் எடுத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த வெற்றியின் மூலம் டெல்லி அணி, நான்கு புள்ளிகளுடன் புள்ளி பட்டியலில் இரண்டாம் இடத்தில் உள்ளது. அதே அளவு புள்ளிகள் பெற்றுள்ள பெங்களூர் அணி முதலிடம் பிடித்துள்ளது. மும்பை மற்றும் குஜராத் அணிகள் முறையே மூன்றாம் மற்றும் நான்காவது இடங்களில் உள்ளன. இதுவரை நடந்த இரண்டு போட்டிகளிலும் தோல்வி அடைந்த உத்தரப்பிரதேச அணி, புள்ளி பட்டியலில் கடைசி இடத்தில் உள்ளது