ஆசியாவில் கிரிக்கெட் விளையாடும் நாடுகளைக் கொண்டு இரண்டு ஆண்டுக்கு ஒருமுறை ஆசியக் கோப்பை தொடரை நடத்தி வருகிறது, ஆசியக் கிரிக்கெட் கவுன்சில், இந்நிலையில் இந்த ஆண்டு செப்டம்பர் மாதம் ஆசியக் கோப்பை தொடர் நடக்கவுள்ளதாக சொல்லப்படுகிறது.
இந்த ஆண்டு ஆசியக் கோப்பை தொடர் டி 20 வடிவில் நடக்கவுள்ளதாக சொல்லப்படுகிறது. ஏனென்றால் அடுத்த ஆண்டு டி 20 உலகக் கோப்பை தொடர் வருகிறது. இதனால் இந்த ஆண்டு கோலி மற்றும் ரோஹித் ஆகியோர் ஆசியக் கோப்பை தொடரில் விளையாட முடியாத சூழல் உருவாகியுள்ளது. அவர்கள் சமீபத்தில் டி 20 போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றனர்.