ஆஸ்திரேலியா, தென்னாப்பிரிக்கா, மேற்கிந்திய தீவுகள், இலங்கை, மற்றும் இந்தியா என அனைத்து நாடுகளும் தனித்தனியாக டி 20 தொடர்களை நடத்தி வருகின்றன. இதில் இந்திய கிரிக்கெட் வாரியம் நடத்தும் ஐபிஎல் தொடர் பணமழை கொட்டும் ஒன்றாக அமைந்துள்ளது.
இந்நிலையில் இந்த லீக் தொடர்களின் வெற்றிபெறும் அணிகளை ஒன்று சேர்த்து உலக டி 20 கிளப் தொடர் ஒன்றை நடத்தும் முயற்சி நடந்து வருகிறது. சில ஆண்டுகளுக்கு முன்னர் இந்த தொடர் சாம்பியன்ஸ் கோப்பை தொடர் என்ற பெயரில் நடத்தப்பட்டு பின்னர் கைவிடப்பட்டது. இந்நிலையில் இப்போது மீண்டும் அந்த தொடரை 2026 ஆம் ஆண்டு முதல் நடத்தப் பேச்சுவார்த்தை நடப்பதாக சொல்லப்படுகிறது.