குஜராத் அணியை பதம் பார்த்தது டெல்லி. 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி

Webdunia
வியாழன், 4 மே 2017 (23:58 IST)
ஐபிஎல் கிரிக்கெட் போட்டியின் இன்றைய ஆட்டத்தில் டெல்லி மற்றும் குஜராத் அணிகள் மோதின. டெல்லி மைதானத்தில் நடந்த இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த குஜரத் அணி 208 ரன்கள் குவித்தது. கேப்டன் சுரேஷ் ரெய்னா 77 ரன்களும், தினேஷ் கார்த்திக் 65 ரன்களும் குவித்தனர்.



 


209 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இமாலய இலக்கை டெல்லி சர்வ சாதாரணமாக நெருங்கியது. ஆரம்பத்தில் இருந்தே அடித்து ஆடிய டெல்லி 17.3 ஓவர்களில் 3 விக்கெட்டுக்களை ம்ட்டுமே இழந்து 214 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. டெல்லி அணியின் பாண்ட் 97 ரன்களும், சாம்சன் 61 ரன்களும் குவித்தனர்.

இந்த வெற்றியின் மூலம் கூடுதலாக 2 புள்ளிகள் எடுத்தபோதிலும் டெல்லி அணி மொத்தமே 8 புள்ளிகள் மட்டும் எடுத்து 6 வது இடத்தில் உள்ளது. மீதமுள்ள நான்கு போட்டிகளிலும் வெற்றி பெற்றால் அடுத்த சுற்றுக்கு தகுதி பெற ஒரு வாய்ப்பு உள்ளது.
அடுத்த கட்டுரையில்