ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 53 ஆவது லீக் போட்டி இன்று அபுதாபியில் நடைபெற உள்ளது. சென்னை மற்றும் பஞ்சாப் அணிகள் இடையே நடைபெறும் இந்த போட்டியில் டாஸ் வென்ற சென்னை அணியின் கேப்டன் தல தோனி பந்துவீச்சை தேர்வு செய்தார். இதனை அடுத்து பஞ்சாப் அணி இன்னும் சில நிமிடங்களில் பேட்டிங் செய்ய உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
புள்ளி பட்டியலில் ஐந்தாவது இடத்தில் இருக்கும் பஞ்சாப் அணி இன்று தனது கடைசி லீக் போட்டியில் விளையாடுகிறது. இந்த போட்டியில் பஞ்சாப் அணி வெற்றி பெற்றால் மட்டுமே அடுத்த சுற்றுக்கு செல்ல முடியும் என்பதும் இல்லையெனில் வெளியே செல்ல வேண்டிய நிலை ஏற்படும் என்பதும் குறிப்பிடத்தக்கது
சென்னையை பொருத்தவரை இந்த போட்டியில் எந்தவிதமான அழுத்தமும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. இன்றைய இரண்டு அணியிலும் விளையாடும் வீரர்கள் குறித்த விபரங்களை தற்போது பார்ப்போம்