220 ரன்கள் குவித்த சிஎஸ்கே: கொல்கத்தாவை வீழ்த்துமா?

Webdunia
புதன், 21 ஏப்ரல் 2021 (21:26 IST)
இன்று நடைபெற்ற சென்னை மற்றும் கொல்கத்தா அணிகளுக்கு இடையிலான போட்டியில் முதலில் பேட்டிங் செய்த சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 3 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து 220 ரன்கள் குவித்துள்ளது 
 
இன்றைய போட்டியில் டாஸ் வென்ற கொல்கத்தா அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்த நிலையில் சென்னை அணி பேட்டிங் செய்ய களத்தில் இறங்கியது. தொடக்க ஆட்டக்காரரான ருத்ராஜ் மற்றும் டூபிளஸ்சிஸ் மிகவும் அபாரமாக தொடக்கத்தை கொடுத்தனர் 
 
டூபிளஸ்சிஸ் கடைசி வரை அவுட் ஆகாமல் 95 ரன்கள் எடுத்தார் என்பதும், ருத்ராஜ் 64 ரன்கள் எடுத்தார் என்பது குறிப்பிடத்தக்கது. கேப்டன் தோனி 8 பந்துகளில் 17 ரன்களும், மொயின் அலி 12 பந்துகளில் 25 ரன்களும், குவித்த நிலையில் ஜடேஜா தான் சந்தித்த முதல் பந்தில் ஒரு சிக்சர் அடித்தார் 
 
இதனையடுத்து சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 3 விக்கெட்டுகளை இழந்து 220 ரன்கள் எடுத்துள்ளது. 221 என்ற இமாலய இலக்கை நோக்கி இன்னும் சில நிமிடங்களில் கொல்கத்தா அணி பேட்டிங் செய்ய உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்