ஐபிஎல்-2021 ; இன்றைய போட்டியில் நடராஜன் இடம்பெறாதது ஏன்? இதுதான் காரணம்

Webdunia
புதன், 21 ஏப்ரல் 2021 (19:45 IST)
இந்திய கிரிக்கெட் அணியின் இடம்பெற்று விளையாடிய தமிழக வீரர் நடராஜன் ஐபிஎல் தொடரில் ஏன் விளையாடவில்லை என பலரும் கேள்வி எழுப்பி வந்த நிலையில் இதற்கு பதில் தற்போது கிடைத்துள்ளது.

ஐபிஎல்2021 14 வது சீசன் தற்போது நடைபெற்று வருகிறது. சென்னையில் இன்று நடைபெறும்  பஞ்சாப் அணியும் ஐதராபாத் அணியும் மோதுகின்றன.

இதில் முக்கிய வீரர்கள் அனைவரும் இடம்பெற்றுள்ளன நிலையில்  நடராஜன் இன்றைய ஆட்டத்தில் இடம்பெறவில்லை.

மும்பைக்கு எதிரான ஆட்டத்திலும் அவர் விளையாடவில்லை. இதுகுறித்து ரசிகர்கள் கேள்வி எழுப்பினர்.

இந்நிலையில் சன்ரைசர்ஸ் அணியின் ஆலோசகர் விவிஎஸ் லட்சுமணன் இதுகுறித்துக் கூறும்போது, காலில் ஏற்பட்டுள்ள காயம் காரணமாக நடராஜன் ன் விளையாடவில்லை; அவர் தற்போது விளையாடவில்லை. மருத்துவர் குழு தான் அவர் எப்போது விளையாட வேண்டுமெனக் கூறுவார்கள் எனத் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்