தோனி பேசாம ரெஸ்ட் எடுத்துக்கலாம்… முன்னாள் வீரரின் அன்பான அட்வைஸ்!

புதன், 21 ஏப்ரல் 2021 (12:23 IST)
தோனி தேவையில்லாமல் ரிஸ்க் எடுப்பதாகவும் அவர் ஓய்வு எடுத்துக் கொள்ளலாம் எனவும் வெஸ்ட் இண்டீஸ் முன்னாள் கேப்டன் லாரா தெரிவித்துள்ளார்.

சிஎஸ்கே இந்த சீசனில் 2 போட்டிகளில் வெற்றி பெற்று புள்ளிப் பட்டியலில் முன்னணியில் இருந்தாலும் தோனியின் பேட்டிங் வழக்கம் போல ஏமாற்றம் அளிப்பதாகவே உள்ளது. 40 வயதில் தோனியால் முன்னர் போல ஷாட்களை எளிதாக ஆடமுடியவில்லை. அதைப் போலவே விக்கெட் கீப்பிங்கிலும் பல நேரங்களில் ஏமாற்றம் அளித்து வருகிறார்.

இந்நிலையில் வெஸ்ட் இண்டீஸ் முன்னாள் ஜாம்பவான் பேட்ஸ்மேன் லாரா ‘தோனி விக்கெட் கீப்பிங், கேப்டன்ஸி என செயலாற்ற வேண்டியுள்ளது. இதனால் அவரை பேட்டிங்கில் கூடுதலாக அழுத்தக் கூடாது. இந்த முறை சென்னை அணி மிக சிறப்பான பேட்டிங் கொண்டுள்ளது. பேசாமல் தோனி ஓய்வு எடுத்துக் கொள்ளலாம்.’ எனக் கூறியுள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்