அயர்லாந்துக்கு எதிராக 349 ரன்கள் குவித்த வங்கதேசம்.. ஆனாலும் வேஸ்ட்..!

Webdunia
செவ்வாய், 21 மார்ச் 2023 (07:50 IST)
அயர்லாந்து அணிக்கு எதிராக ஒரு நாள் போட்டியில் 349 ரன்கள் வங்கதேச அணி எடுத்த நிலையில் மழை காரணமாக ஆட்டம் நிறுத்தப்பட்டதால் அந்த அணியின் வீரர்கள் அதிருப்தி அடைந்துள்ளனர். நேற்று நடைபெற்ற வங்கதேசம் மற்றும் அயர்லாந்து அணிகளுக்கு இடையிலான இரண்டாவது ஒருநாள் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த வங்கதேச அணி 50 ஓவர்களில் 6 விக்கெட்டுகளை இழந்து 349 ரன்கள் அடித்தது. 
 
வங்கதேச அணியின்  ரஹீம் மிக அபாரமாக விளையாடிய 100 ரன்கள் எடுத்தார். இந்த நிலையில் 350 ரன்கள் என்ற இலக்கை நோக்கி அயர்லாந்து அணி விளையாட இருந்த நிலையில் மழை குறுக்கிட்டதால் ஆட்டம் நிறுத்தப்பட்டது 
 
மழை தொடர்ந்து பெய்து கொண்டிருந்ததால் ஆட்டம் கைவிடப்பட்டதாக நடுவர்களால் அறிவிக்கப்பட்டதை அடுத்து வங்கதேச அணி வீரர்கள் அதிருப்தி அடைந்துள்ளனர் இருப்பினும் இந்த தொடரில் வங்கதேச அணி 1-0 என்ற கணக்கில் முன்னணியில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்