கே.எல்.ராகுல் அரைசதம்: இலக்கை நெருங்கி வரும் இந்தியா..!

வெள்ளி, 17 மார்ச் 2023 (20:12 IST)
இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கிடையே முதலாவது ஒரு நாள் கிரிக்கெட் போட்டி தற்போது மும்பையில் நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலியா அணி அனைத்து விக்கட்டுகளையும் இழந்து 178 ரன்கள் மட்டுமே எடுத்தது. 
 
இந்த நிலையில் இந்தியா 189 என்ற இலக்கை நோக்கி தற்போது விளையாடி வரும் நிலையில் சற்று முன் 35 ஓவர்களில் 5 விக்கெட் இழப்பிற்கு 146 ரன்கள் எடுத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. 
 
இன்னும் 15 ஓவர்களில் வெறும் 43 ரன்கள் மட்டுமே எடுக்க வேண்டிய நிலையில் இந்தியாவின் வெற்றி கிட்டத்தட்ட உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்தியாவின் கே எல் ராகுல் மிக அபாரமாக விளையாடி அரை சதம் அடித்துள்ளார் என்பதும் அவருக்கு துணையாக ரவிந்திர ஜடேஜா 32 ரன்கள் அடித்து விளையாடி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
 
Edited by Siva

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்