இலங்கைக்கு அதிர்ச்சி கொடுத்த வங்கதேசம்: அபார ஆட்டத்தால் இறுதிக்கு தகுதி

Webdunia
சனி, 17 மார்ச் 2018 (06:15 IST)
நிதாஷா கோப்பை டி20 போட்டியின் முக்கிய ஆட்டம் நேற்று நடைபெற்றது. இந்த போட்டியில் வெல்லும் அணியே இறுதி போட்டிக்கு தகுதி பெறும் என்ற நிலையில் இலங்கை அணியை அதன் சொந்த மண்ணில் வீழ்த்திய வங்கதேசம் இறுதி போட்டிக்கு தகுதி பெற்றது.

டாஸ் வென்ற வங்கதேசம் முதலில் பந்துவீச முடிவு செய்ததால் இலங்கை அணி முதலில் பேட்டிங் செய்தது .நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் அந்த அணி 7 விக்கெட்டுக்களை இழந்து 159 ரன்கள் எடுத்தது. பெரரா 61 ரன்கள் எடுத்தார்

இந்த நிலையில் 160 ரன்கள் எடுத்தால் இறுதிக்கு தகுதி பெறலாம் என்ற இலக்குடன் களமிறங்கிய வங்கதேச அணிக்கு ஆரம்பமே அதிர்ச்சியாக இருந்தது. தொடக்க ஆட்டக்காரர் லிட்டன் டாஸ் ரன் ஏதும் எடுக்காமல் அவுட் ஆனார். இருப்பினும் தமிம் இக்பால், மஹ்முதுல்லா ஆகியோர்களின் அபார  ஆட்டத்தால் அந்த அணி 19.5 ஓவர்களில் 160 ரன்கள் எடுத்து த்ரில் வெற்றி பெற்றது. 43 ரன்கள் எடுத்த மஹ்முதுல்லா ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார். நாளை இந்திய வங்கதேச அணிகள் இறுதிப்போட்டியில் மோதவுள்ளன.

 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்