COPA America 2024: கனடாவை வீழ்த்திய மெஸ்ஸி! இறுதிப் போட்டியில் அர்ஜெண்டினா!

Prasanth Karthick

புதன், 10 ஜூலை 2024 (09:25 IST)

பிரபல கால்பந்து போட்டிகளில் ஒன்றான கோப்பா அமெரிக்கா தொடரில் கனடாவை வீழ்த்திய அர்ஜெண்டினா இறுதி போட்டிக்கு முன்னேறியுள்ளது.

கால்பந்து ரசிகர்களிடையே பிரபலமாக உள்ள கால்பந்து போட்டிகளில் ஈரோ கால்பந்து போட்டிகள், லா லிகா வரிசையில் கோப்பா அமெரிக்காவும் முக்கியமான போட்டியாகும். இந்த போட்டிகளில் பல நாட்டு அணிகள் மோதிக் கொண்ட நிலையில் அர்ஜெண்டினா, கனடா, உருகுவே மற்றும் கொலம்பியா நாடுகள் அரையிறுதி போட்டிகளுக்கு தகுதி பெற்றன,

இந்நிலையில் நேற்று நடந்த முதல் அரையிறுதி போட்டியில் அர்ஜெண்டினா - கனடா அணிகள் மோதிக் கொண்டன. இந்த போட்டியில் முதல் பாதியில் அர்ஜெண்டினா தனது முதல் கோலை பதிவு செய்தது. இரண்டாம் பாதியில் கனடா ஒரு கோலாவது அடித்து விட முயற்சித்து வந்த நிலையில் அதை அர்ஜெண்டின வீரர்கள் லாவகமாக தடுத்ததுடன், நட்சத்திர வீரர் லியோனல் மெஸ்ஸி ஒரு கோல் அடித்தார். இதனால் அர்ஜெண்டினா 2-0 என்ற கணக்கில் போட்டியை வென்றது. 
 

ALSO READ: மகளிர் டி20 போட்டி: 84 ரன்களில் சுருண்ட தெ.ஆ. அணி.. விக்கெட் இழப்பின்றி இந்தியா அபார வெற்றி..!

இதனால் அர்ஜெண்டினா அணி நேரடியாக கோப்பா அமெரிக்கா இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ளது. இரண்டாவது அரையிறுதியில் கொலம்பியா - உருகுவே அணிகள் மோதிக் கொள்கின்றன. இதில் வெற்றி பெறும் அணி கனடாவை எதிர்கொள்ளும். அந்த போட்டியில் வெல்லும் அணி இறுதி போட்டியில் அர்ஜெண்டினாவிடம் மோதும். ஏற்கனவே அர்ஜெண்டினா ஃபிஃபா உலகக்கோப்பையை வென்று நடப்பு சாம்பியனாக உள்ள நிலையில், கோப்பா அமெரிக்காவையும் வெல்லும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Edit by Prasanth.K

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்