உலகக்கோப்பை ஹாக்கி: அரையிறுதிக்கு முன்னேறிய ஆஸ்திரேலியா!

Webdunia
புதன், 25 ஜனவரி 2023 (18:12 IST)
கடந்த சில நாட்களாக ஒடிசாவில் உலக கோப்பை ஹாக்கி போட்டி நடைபெற்று வரும் நிலையில் அரையிறுதிக்கு தகுதிபெறும் முக்கிய போட்டியில் ஸ்பெயின் மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் என்று மோதின. 
 
ஆட்டத்தின் முதல் பாதியில் ஸ்பெயின் அணி இரண்டு கோல் போட்டு முன்னிலையில் இருந்த நிலையில் இரண்டாவது பாதியில் ஆஸ்திரேலியா அணி அதிரடியாக விளையாடி அடுத்தடுத்து நான்கு கோல்கள் போட்டது
 
இதனை அடுத்து ஸ்பெயின் ஒரு கோல் போட்டதால் ஆஸ்திரேலியா 4-3  என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது. இதனை அடுத்து ஆஸ்திரேலியா அணி அரையிறுதிக்கு  தகுதி பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்