ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டியின் நேற்றைய இரண்டாவது போட்டியில் ஹாங்காங் அணியை, பாகிஸ்தான் அணி 8 விக்கெட்டுக்கள் வித்தியாசத்தில் எளிதில் வீழ்த்தியதூ.
டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த ஹாங்காங் அணி 37.1 ஓவர்களில் 116 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. கே.டி.ஷா 26 ரன்களூம், அயிஸ்கான் 27 ரன்களும் எடுத்தனர்.
117 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிய இலக்கை விரட்டிய பாகிஸ்தான் அணி, 23.4 ஓவர்களில் இரண்டு விக்கெட்டுக்களை மட்டுமே இழந்து 120 ரன்கள் எடுத்து 8 விக்கெட்டுக்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த வெற்றியினால் பாகிஸ்தான் அணி ரன்ரேட்படி 2 புள்ளிகள் பெற்று முதலிடத்தில் உள்ளது.
இன்று ஆப்கானிஸ்தான் மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையிலான போட்டி நடைபெறவுள்ளது