அரசு ரூ.185 கோடி சேமித்த பாகிஸ்தான் பிரதமர்

சனி, 15 செப்டம்பர் 2018 (18:11 IST)
பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் அலுவலக இல்லத்தில் தங்காமல் அரசுக்கு ரூ.185 கோடி சேமிக்க முடிவு செய்துள்ளார்.

 
பாகிஸ்தான் நாட்டில் அண்மையில் நடைபெற்ற தேர்தலில் கிரிக்கெட் வீரர் இம்ரான் கான் பிரதமராக போட்டியிட்டு வெற்றிப்பெற்றார். அரசை நடத்த போதிய நிதி இல்லை என்று கூறினார். இதற்காக தனக்கு ஒதுக்கப்பட்ட அலுவலக இல்லத்தில் தங்காமல் ரூ.185 கோடி அரசு நிதியை சேமிக்க முடிவு செய்துள்ளார்.
 
இதேபோன்று தனது கட்சியின் ஆட்சி அதிகாரத்திற்கு உட்பட்ட மந்திரிகள் மற்றும் மாகாண முதல் மந்திரிகளும் நன்னடத்தைக்கான விதிகளை பின்பற்றுவார்கள் என உறுதி அளித்துள்ளார்.
 
இதுபோன்ற செலவுகளை குறைப்பதற்கான இம்ரான் கானின் இந்த செயலை பலரும் பாராட்டி வருகின்றனர்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்