மீண்டும் கேப்டனாக கோலி? அஸ்வினின் ஆருடம் பலிக்குமா?

Webdunia
வியாழன், 24 மார்ச் 2022 (10:58 IST)
இந்திய அணியின் முன்னாள் கேப்டன் கோலி அனைத்து விதமான போட்டிகளில் இருந்தும் கேப்டன் பொறுப்பை துறந்துள்ளார்.

2021 ஆம் ஆண்டு இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் கோலிக்கு மிக மோசமான ஆண்டாக அமைந்தது. ஐபிஎல் உள்ளிட்ட சர்வதேசக் கிரிக்கெட் போட்டிகளின் கேப்டன் பொறுப்பில் இருந்தும் விலகினார். முதலில் ஆர் சி பி அணியின் கேப்டன் பொறுப்பில் இருந்துதான் அவர் விலகினார். அதுபோல அந்த அணியின் மற்றொரு நட்சத்திர வீரரான டிவில்லியர்ஸ் ஓய்வு பெற்றார். இது அந்த அணிக்கு பெரும் பின்னடைவாக அமைந்தது. இதையடுத்து 2022 ஆம் ஆண்டுக்கான ஐபிஎல் தொடருக்கு கேப்டனாக தென் ஆப்பிரிக்க வீரர் பாஃப் டு பிளஸ்சி நியமிக்கப்பட்டுள்ளார்.

இந்நிலையில் கோலி பற்றி பேசியுள்ள ரவிச்சந்திரன் அஸ்வின் ‘கடந்த சில ஆண்டுகளாக கோலி கேப்டன்பொறுப்பில் இருந்ததை அடுத்து விமர்சனங்களை சந்தித்து வந்தார். இதனால் இப்போதைய விலகல் ஒரு தற்காலிக பிரேக்காக இருக்கும். மீண்டும் அடுத்த ஆண்டே கூட அவர் பெங்களூர் அணியின் கேப்டன் பொறுப்பை ஏற்றுக்கொள்ள வாய்ப்புள்ளது.’ என்று கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்