அடிலெய்ட் டெஸ்ட்டுக்கு பின் ஆஸி கிரிக்கெட் வாரியம் செய்த மோசமான செயல் – அஸ்வின் குற்றச்சாட்டு!

Webdunia
ஞாயிறு, 24 ஜனவரி 2021 (15:54 IST)
முடிந்த பார்டர் கவாஸ்கர் கோப்பை டெஸ்ட் தொடரை இந்திய அணி 2-1 என்ற கணக்கில் சிறப்பாக வெற்றிபெற்றுள்ளது.

ஆஸ்திரேலியாவில் நடந்த பார்டர் கவாஸ்கர் கோப்பையை இந்திய அணி இரண்டாவது முறையாக வென்று சாதனைப் படைத்துள்ளது. இந்த டெஸ்ட் தொடரின் முதல் போட்டியில் இந்திய அணி மோசமான தோல்வியைப் பெற்றது. அப்போது ஆஸி அணி கிரிக்கெட் நிர்வாகத்தின் போக்கில் மிகப்பெரிய மாற்றம் ஏற்பட்டதாக அஸ்வின் குற்றச்சாட்டு எழுப்பியுள்ளார்.

இதுகுறித்து அவர் ‘எங்களை ஆஸி வீரர்கள் செல்லும் லிஃப்டுக்குள் கூட செல்ல அனுமதி மறுத்துவிட்டனர். இத்தனைக்கும் நாங்கள் ஒரே பயோ பபுளில்தான் இருந்தோம். அதுபோல நிறைய கட்டுப்பாடுகளையும் அவமானங்களையும் எதிர்கொண்டோம்’ எனக் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்