ஆர் சி பி கேப்டனாக மீண்டும் கோலி…. இந்திய முன்னாள் வீரர் கருத்து!

Webdunia
திங்கள், 7 பிப்ரவரி 2022 (16:32 IST)
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் விராட் கோலி கடந்த ஆண்டு அனைத்துக் கேப்டன் பதவிகளில் இருந்தும் விலகினார்.

2021 ஆம் ஆண்டு இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் கோலிக்கு மிக மோசமான ஆண்டாக அமைந்தது. ஐபிஎல் உள்ளிட்ட சர்வதேசக் கிரிக்கெட் போட்டிகளின் கேப்டன் பொறுப்பில் இருந்தும் விலகினார். முதலில் ஆர் சி பி அணியின் கேப்டன் பொறுப்பில் இருந்துதான் அவர் விலகினார்.

ஆனால் இப்போது அவர் சர்வதேச போட்டிகளின் கேப்டன் பொறுப்பில் இருந்து விலகியதால் அவருக்கான பணிச்சுமை குறைந்துள்ளது. இதனால் அவர் மீண்டும் ஆர் சி பி அணிக்கு தலைமையேற்க வேண்டும் என்ற ஆசை ரசிகர்களிடம் எழுந்துள்ளது. இதுபற்றி பேசியுள்ள இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் அஜித் அகார்கர் ‘கோலி கேப்டன் பதவியை ஏற்று நடத்துவதை மகிழ்ச்சியாக இருந்தால், அது அணிக்கு எளிதாக இருக்கும்’ எனக் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்