பஞ்சாப் மாநிலத்தில் பிப்ரவரி 20ஆம் தேதியும் மார்ச் 10-ஆம் தேதியும் சட்டமன்ற தேர்தல் நடைபெற இருக்கும் நிலையில் அங்கு அரசியல் கட்சிகள் தீவிரமாக பிரசாரம் செய்து வருகின்றன. இந்த நிலையில் நேற்று காங்கிரஸ் கட்சியின் முதல்வர் வேட்பாளராக சரண்ஜித் சிங் சன்னியை ராகுல் காந்தி அறிவித்தார். இது பஞ்சாப் காங்கிரஸில் மேலும் பூசல்களை உருவாக்கியுள்ளது.