பென்ச்சில் உட்காரவைக்கப்பட்ட வார்னர்தான் இன்று தொடர்நாயகன்! முன்பே கணித்த ஆஸி கேப்டன்!

Webdunia
திங்கள், 15 நவம்பர் 2021 (11:16 IST)
ஆஸி அணியின் தொடக்க ஆட்டக்காரர் டேவிட் வார்னர் மோசமான பார்ம் காரணமாக தடுமாறி வந்த நிலையில் புத்துணர்ச்சி பெற்று உலகக்கோப்பையில் தொடர் நாயகன் விருதைப் பெற்றுள்ளார்.

ஆஸி அணியின் தொடக்க ஆட்டக்காரரான டேவிட் வார்னர் சமீபகாலமாக மோசமான ஆட்டத்திறனால் பாதிக்கப்பட்டார். இதன் காரணமாக தான் தலைமை ஏற்று கோப்பையை வென்று கொடுத்த ஐபிஎல் அணியில் இருந்து நீக்கப்பட்டு மைதானத்துக்குள்ளே கூட வரமுடியாத அளவுக்கு மோசமாக நடத்தப்பட்டார். இது அவரை மனதளவில் பாதிக்க மைதானத்தில் சோகமாக இருக்கும் புகைப்படம் எல்லாம் வெளியாகி ரசிகர்களை கவலைக்குள்ளாக்கியது.

ஆனால் அவரை நம்பி இந்த தொடரில் அவருக்கு தொடக்க வீரராக களமிறங்க ஆஸி அணியினர் வாய்ப்பளித்தனர். தொடரின் முதல் இரண்டு போட்டிகளில் சொதப்பினாலும் பின்னர் சுதாரித்த வார்னர் தொடர் இறுதியில் 289 ரன்கள் சேர்த்து தொடர்நாயகனாக தேர்வு செய்யப்படுள்ளார். வார்னரின் ஆட்டத்திறன் குறித்து பேசியுள்ள ஆஸி அணியின் கேப்டன் ஆரோன் பின்ச் ‘தொடர் ஆரம்பிக்கும் முன்பாகவே இந்த தொடர் வார்னருக்கு சிறப்பானதாக இருக்கும் என்று அவரிடம் அணியின் பயிற்சியாளர் லாங்கரிடமும் கூறியிருந்தேன்’ எனக் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்