டெல்லி அணி இன்றோடு முடிந்துவிடும்… முன்னணி வர்ணனையாளர் கருத்து!

Webdunia
புதன், 13 அக்டோபர் 2021 (16:25 IST)
இன்று நடக்கும் எலிமினேட்டர் இரண்டாவது போட்டியில் கொல்கத்தா அணிதான் வெற்றி பெறும் என ஆகாஷ் சோப்ரா தெரிவித்துள்ளார்.

இந்த ஆண்டின் ஐபிஎல் தொடர் போட்டி இறுதி கட்டத்தை நெருங்கியுள்ள நிலையில் இன்று எலிமினேட்டர் இரண்டாவது சுற்று போட்டி நடைபெற உள்ளது. இன்றைய போட்டியில் கொல்கத்தா அணி டெல்லி அணியுடன் மோத உள்ளது என்பதும் இன்றைய போட்டியில் வெற்றி பெறும் அணி இறுதிப் போட்டிகள் சென்னை அணியுடன் மோதும் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த போட்டி பற்றி பேசியுள்ள முன்னாள் வீரரும் வர்ணனையாளருமான ஆகாஷ் சோப்ரா ‘இந்த போட்டியில் கொல்கத்தா அணி வெற்றி பெறும். டெல்லி இன்றோடு நடையைக் கட்டும். இன்றோடு விடைபெற வேண்டியதுதான்’ எனக் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்