ஐபிஎல் சூதாட்டம்? சென்னையில் ஒருவர் கைது

புதன், 13 அக்டோபர் 2021 (10:45 IST)
ஆன்லைன் விளையாட்டு போட்டிகளில் சூதாட்டத்தில் ஈடுபட்டு வந்த ஹரிகிருஷ்ணன் என்பவன் கைது.
 
அரபு அமீரகத்தில் பரபரப்பாக நடந்து வந்த ஐபிஎல் போட்டிகள் தற்போது இறுதி கட்டத்தை எட்டியுள்ளன. இதில் முந்தைய போட்டியில் வென்று சிஎஸ்கே நேரடியாக இறுதி போட்டிக்கு முன்னேறியுள்ளது. இதனிடையே சென்னையில் ஆன்லைன் விளையாட்டு போட்டிகளில் சூதாட்டத்தில் ஈடுபட்டு வந்த ஹரிகிருஷ்ணன் கைது செய்யப்பட்டுள்ளார். 
 
கைதான ஹரிகிருஷ்ணன் ஐபிஎல் போட்டி சூதாட்டத்தில் ஈடுபட்டாரா என சைபர் கிரைம் போலீஸ் விசாரணை நடத்துகின்றனர். மாமல்லபுரம் ராடிசன் புளூ ஓட்டலில் ஹரிகிருஷ்ணன் கைது செய்யப்பட்டான்.  ன்லைன் சூதாட்டத்தில் ரூ.87 லட்சம் கட்டி ஏமாந்த சூளைமேடு விக்னேஷ் புகாரின் பேரில் போலீஸ் ஹரிகிருஷ்ணனை கைது செய்துள்ளனர். 
 
கைதான ஹரிகிருஷ்ணன் இருந்து 193 கிராம் தங்கம், ரூ.24.68 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. 6 கிலோ வெள்ளி பொருட்கள், 10 செல்போன்கள், 1 ஐபேட், 1 லேப்டாப்பையும் போலீஸ் பறிமுதல் செய்தது. 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்