பிரபல ஃபோர்ப்ஸ் பத்திரிக்கை 2025ம் ஆண்டிற்கான பணக்கார விளையாட்டு வீரர்கள் பட்டியலை வெளியிட்டுள்ள நிலையில் அதில் ரொனால்டோ முதல் இடத்தில் உள்ளார்.
உலகம் முழுவதுமுள்ள பல்வேறு விளையாட்டுகளை சேர்ந்த வீரர்களில் அதிக சொத்து மதிப்பு கொண்ட வீரர்கள் பட்டியலை ஃபோர்ப்ஸ் வெளியிட்டுள்ளது. இதில் போர்ச்சுக்கல் கால்பந்து வீரரான கிறிஸ்டியானோ ரொனால்டோ 275 மில்லியன் டாலர் வருமானத்துடன் முதல் இடத்தில் உள்ளார். இந்திய ரூபாய் மதிப்பில் இது ரூ.2,293 கோடியாகும்.
உலகம் முழுவதும் கோடிக்கணக்கான ரசிகர்களை கொண்ட ரொனால்டோ தற்போது க்ளப் போட்டிகளில் சவுதியின் அல் நாசர் அணிக்கு விளையாடி வருகிறார். இதற்காக ரொனால்டோவுக்கு பல மில்லியன் டாலர்கள் வழங்கப்பட்டது. மேலும் ரொனால்டோ சொந்தமாக நட்சத்திர ஓட்டல்கள், வாசனை திரவிய தயாரிப்புகள் என பல தொழில்களில் லாபம் ஈட்டி வருகிறார். இதுதவிர விளம்பர படங்களில் நடிப்பதற்காக மில்லியன்களில் சம்பளம் பெறுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
Edit by Prasanth.K