ஐபிஎல்லில் கோப்பை வெல்வது குறித்த கேள்விக்கு சமீபத்தில் அதன் கேப்டன் ரஜத் படிதார் அளித்த பதிலுக்கு ரசிகர்கள் ரியாக்ட் செய்து வருகின்றனர்.
ஐபிஎல் சீசன் தொடங்கி 18 ஆண்டுகளாக தொடர்ந்து களத்தில் உள்ள அணிகளில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி முக்கியமானது. ஐபிஎல் அணிகளில் அதிகமான ரசிகர்களை கொண்ட முக்கிய அணியான ஆர்சிபி இதுவரை ஒருமுறைக் கூட கோப்பையை வெல்லவில்லை என்பதுதான் ரசிகர்களின் சோகம்.
கடந்த சீசனில் ப்ளே ஆப் வரை சென்று தோற்ற ஆர்சிபி அணி, இந்த சீசனில் ஆரம்பம் முதலே சிறப்பாக விளையாடி வந்தது. ஈ சாலா கப் நமதே என ரசிகர்கள் ஆவலாய் காத்திருந்த நிலையில் போர் காரணமாக போட்டிகள் ஒத்திவைக்கப்பட்டது. நாளை முதல் ஐபிஎல் போட்டிகள் தொடங்கினாலும் ஆர்சிபியின் பல முக்கியமான வெளிநாட்டு வீரர்கள் அணியில் இருக்க மாட்டார்கள் என கூறப்படுகிறது. இது ஆர்சிபிக்கு பின்னடைவாக அமையலாம் என ரசிகர்கள் சோகத்தில் உள்ளனர்.
இந்நிலையில் சமீபத்தில் ஒரு பேட்டியில் ஆர்சிபி கோப்பை வெல்வது குறித்து பேசிய கேப்டன் ரஜத் படிதார் “ஆர்சிபியிடம் கோப்பை இல்லை என யாரும் சொல்ல முடியாது. எங்களது மகளிர் அணி கோப்பையை வென்றுள்ளார்கள். அதுவே எங்களுக்கு மிகப்பெரிய உத்வேகமாக உள்ளது” எனக் கூறியுள்ளார்.
ஏற்கனவே மற்ற அணி ரசிகர்கள் ஆர்சிபி அணி ரசிகர்களை மகளிர் அணி கோப்பை வென்றதை வைத்து கிண்டல் செய்வது சமூக வலைதளங்களில் அதிகமாக உள்ள நிலையில், அதற்கு மேலும் உத்வேகம் அளிக்கும்படி ரஜத் படிதார் பேசியுள்ளது ஆர்சிபி ரசிகர்களை மேலும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
Edit by Prasanth.K