ஐபிஎல் 2022: 178 ரன்கள் டெல்லிக்கு இலக்கு கொடுத்த மும்பை!

Webdunia
ஞாயிறு, 27 மார்ச் 2022 (17:23 IST)
ஐபிஎல் 2022: 178 ரன்கள் டெல்லிக்கு இலக்கு கொடுத்த மும்பை!
இன்று நடைபெற்று வரும் மும்பை மற்றும் டெல்லி அணிகளுக்கு இடையிலான ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் மும்பை அணி முதலில் பேட்டிங் செய்து 177 ரன்கள் அடித்து உள்ளதை அடுத்து 178 ரன்கள் இலக்காக டெல்லி அணிக்கு கொடுத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது 
 
இன்றைய போட்டியில் டாஸ் வென்ற டெல்லி அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்ததை அடுத்து மும்பை அணி பேட்டிங் செய்தது. அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரரான இஷான் கிஷான் மிக அபாரமாக விளையாடி 81 ரன்கள் எடுத்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார். கேப்டன் ரோகித் சர்மா 41 ரன்கள் எடுத்தார் என்பது குறிப்பிடத்தக்கது
 
டெல்லி தரப்பில் குல்தீப் யாதவ் 3 விக்கெட்டுகளையும் கலீல் அஹமது 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தி உள்ளனர். இந்த நிலையில் 178 ரன்கள் என்ற இலக்கை நோக்கி இன்னும் சில நிமிடங்களில் டெல்லி அணி பேட்டிங் செய்ய உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
 
 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்