பலவகையான தோஷங்களும் அதற்கான பரிகாரங்களும்...!

Webdunia
செவ்வாய் தோஷம்: ஜாதக கட்டத்தில் லக்னத்துக்கு 2, 4, 7, 8, 12 ஆகிய இடங்களில் செவ்வாய் கிரகம் இருந்தால் செவ்வாய் தோஷம்.
செவ்வாய்க்கிழமை விரதம் இருந்து முருகனுக்கு அர்ச்சனை செய்து வரலாம். அறுபடை வீடுகளுக்கு சென்று தரிசனம் செய்யலாம். வைத்தீஸ்வரன் கோயிலில்  பரிகார பூஜை செய்யலாம். பழநி ஆண்டவருக்கு வேண்டிக்கொண்டு பிரார்த்தனைகளை நிறைவேற்றலாம்.
 
ராகு-கேது தோஷம்:
 
லக்னம், 2, 7, 8 ஆகிய இடங்களில் ராகு அல்லது கேது இருப்பதால் சர்ப்ப தோஷம் ஏற்படுகிறது.
 
திருநாகேஸ்வரம், காளஹஸ்தி ஆகிய ஸ்தலங்களுக்கு சென்று வழிபடலாம். சங்கடஹர சதுர்த்தியன்று விநாயகரை வழிபடலாம். செவ்வாய்க்கிழமை ராகு  காலத்தில் துர்க்கையை வணங்கலாம்.
 
சூரிய தோஷம்:
 
ஜாதக கட்டத்தில் லக்னத்துக்கு 2, 7, 8 ஆகிய இடங்களில் சூரியன் இருந்தால் சூரிய தோஷமாகும்.
 
ஞாயிற்றுக்கிழமை விரதம் இருந்து பசு மாட்டுக்கு கோதுமையால் செய்த உணவு அளிக்கலாம். தினமும் ஆதித்ய ஹிருதய ஸ்தோத்திரம் படிக்கலாம். ஆடுதுறை  அருகில் உள்ள சூரியனார் கோவிலுக்கு சென்று வழிபடலாம்.
 
களத்திர தோஷம்:
 
களத்திர ஸ்தானம் என்னும் 7-ம் இடத்தில் களத்திர காரகன் சுக்கிரன் இருப்பது களத்திர தோஷமாகும்.
 
சுமங்கலி பெண்களுக்கு ஜாக்கெட் பிட், தேங்காய், பூ, பழம், தாலி கயிறு, மஞ்சள், வெற்றிலை பாக்கு தட்சிணை வழங்கி ஆசி பெறலாம்.
 
ஜாதக அமைப்புகளை சீர்தூக்கி பார்த்து தகுந்த ஜாதகத்தை சேர்ப்பதன் மூலமாகவும் எளிய பரிகாரங்களை செய்வதன் மூலமாகவும் மகிழ்ச்சியான மணவாழ்க்கை  அமையும் என்பதில் எள்ளளவும் சந்தேகம் இல்லை. மேலும் சில எளிய பரிகாரங்கள் செய்வதால் தடைகள், இடையூறுகள் விலகும்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்