மகரம்: ஆவணி மாத ராசி பலன்கள்

வியாழன், 16 ஆகஸ்ட் 2018 (15:29 IST)
உத்திராடம் 2, 3, 4 பாதம், திருவோணம், அவிட்டம் 1,2 பாதம் - விருந்தினரை உபசரிப்பதில் மகிழ்ச்சியடையும் மகர ராசியினரே நீங்கள் வைராக்கியம் மிக்கவர்.  எடுத்த கொள்கைகளை யாருக்காகவும் விட்டுக் கொடுக்காதவர். 

இந்த மாதம் ராசியாதிபதி சனி சஞ்சாரத்தால் சுபச் செலவுகள் ஏற்படும். எடுத்த காரியத்தை  செய்து முடிப்பதில் அதிக முயற்சி தேவைப்படும். கொடுத்த வாக்கை காப்பாற்ற பாடுபட வேண்டி இருக்கும். மற்றவர்களின்  பிரச்சனைகளுக்கு வலிய சென்று  உதவிகள் செய்வதை தவிர்ப்பது நல்லது. விருப்பம் இல்லாத இடமாற்றம் உண்டாகலாம். 
 
தொழில் வியாபாரம் முன்னேற்றம் காண மிகவும் கடுமையாக உழைக்க வேண்டி இருக்கும்.   பார்ட்னர்களுடன் அனுசரித்து செல்வது நல்லது. உத்தியோகத்தில்  இருப்பவர்கள் எதிர்பார்த்தபடி பணிகள் முடியாமல் மனசங்கடத்திற்கு ஆளாக நேரிடும். 
 
குடும்பத்தில் இருப்பவர்களின் தேவைகளை பூர்த்தி செய்ய பாடுபடுவீர்கள். கணவன், மனைவிக்கிடையே வெளியில் சொல்ல முடியாத மனக்குறைகள் வரலாம்.  பிள்ளைகள்  கல்வி மற்றும் அவர்கள் எதிர்காலம் பற்றிய கவலை ஏற்பட்டு நீங்கும். 
 
பெண்களுக்கு  விருப்பம் இல்லாமல் பயணம் செல்ல நேரிடலாம். வீண் மன சங்கடத்திற்கு  ஆளாகலாம். எதிலும் கவனம் தேவை. கலைத்துறையினருக்கு  எடுத்த காரியத்தை எப்படியும் செய்து முடித்து விடுவீர்கள். அரசியல்துறையினர் பொறுப்புகள் அதிகரிக்கும். உற்சாகமாக எதையும் கற்றுக்கொள்வதில் ஆர்வம்  காட்டுவீர்கள். மாணவர்களுக்கு  விளையாட்டில் ஆர்வம் அதிகரிக்கும். பாடங்கள் எளிமையாக தோன்றினாலும் கவனமாக படிப்பது அவசியம். 
 
உத்திராடம் 2, 3, 4 பாதங்கள்: நண்பர்களின் உதவி சிறப்பாக இருக்கும் என்றாலும் நல்ல நட்புகளை தேர்ந்தெடுத்துப் பழகுவது நல்லது. எடுக்கும் முயற்சிகளை  எதிர் நீச்சல் போட்டே முடிக்க வேண்டி வரும். எதிலும் சற்று கவனமுடன் செயல்பட்டால் நற்பலனைப் பெற முடியும். மாணவர்கள் கல்வியில் சற்று  கவனமுடன் செயல்பட்டால் எதிர் பார்த்த இலக்கை அடைவீர்கள். 
 
திருவோணம்: கணவன் மனைவியிடையே சிறுசிறு கருத்து வேறுபாடுகளும் உடல் ஆரோக்கியத்தில் பாதிப்புகளும் ஏற்படும். திருமண சுப காரியங்கள்  தடைகளுக்கு பின் நிறைவேறும். புத்திர வழியில் நிம்மதி குறைவு, பூர்வீக சொத்துக்களால் வீண் செலவுகள் உண்டாகும். கணவன் மனைவியிடையே சிறு சிறு  கருத்து வேறுபாடுகள் தோன்றும் என்றாலும் ஒற்றுமை குறையாது. 
 
அவிட்டம் 1,2 பாதங்கள்: உற்றார், உறவினர்களை சற்றே அனுசரித்து செல்வது நல்லது. செய்யும் தொழில் வியாபாரத்தில் நல்ல லாபங்கள் அமையும் என்றாலும்  கூட்டாளிகளால் சற்று நிம்மதி குறைவு ஏற்படும். பயணங்களால் அனுகூலம் உண்டாகும். உடல் ஆரோக்கியத்தில் அடிக்கடி பாதிப்புகள் தோன்றினாலும் அன்றாட  பணிகளில் சுறு சுறுப்புடன் செயல்பட முடியும். 
 
சந்திராஷ்டம தினங்கள்: செப்டம்பர் 09, 10
 
அதிர்ஷ்ட தினங்கள்: ஆகஸ்டு 31, செப்டம்பர் 01
 
பரிகாரம்: சனிக்கிழமையில் சனிபகவானுக்கு எள் சாதம் நைவேதியம் செய்து காகத்திற்கு வைக்க பிணிகள் நீங்கும். காரிய தடை, எதிர்ப்புகள் அகலும்.  உழைப்புக்கு ஏற்ற ஊதியம் கிடைக்கும்.
 
அதிர்ஷ்ட கிழமைகள்: செவ்வாய், வெள்ளி.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்