கும்பம்: ஆவணி மாத ராசி பலன்கள்

வியாழன், 16 ஆகஸ்ட் 2018 (15:38 IST)
அவிட்டம் 3, 4 பாதம், சதயம், பூரட்டாதி 1, 2, 3  பாதம் - மற்றவர்களிடம் இருந்து தகவல்களை தெரிந்து கொள்ளும் திறமை உடைய கும்ப ராசியினரே நீங்கள் ரகசியம் காப்பதில் வல்லவர்.

இந்த மாதம் ராசியாதிபதி சனி லாபஸ்தானத்தில் சஞ்சரிக்கிறார். எடுத்துக் கொண்ட பயணங்கள் வெற்றியடையும். அதிகமான உழைப்பால் அலைச்சல், உடல்நலக்கேடு போன்றவை ஏற்படலாம். திட்டமிட்டு எதையும் செய்வது நல்லது.  மனதில் வீண்கவலைகள் உண்டாகக் கூடும்.  அடுத்தவரை  நம்பி எதையும்  ஒப்படைப்பதை  தவிர்ப்பது நல்லது.  சுபசெலவுகள் ஏற்படும். 
 
தொழில் வியாபாரம் திட்டமிட்டபடி  நடந்தாலும் சற்று நிதானமாக இருக்கும்.  சரக்குகளை  வாடிக்கையாளர்களுக்கு அனுப்புவதில் தாமதம் ஏற்படலாம்.  போட்டிகள் தலைதூக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் கூடுதலான வேலைப்பளுவால் உடல் சோர்வடைவார்கள். 
 
குடும்பத்தில் இறுக்கமான சூழ்நிலை காணப்படும். மனதில் இருப்பதை வெளியில் சொல்லாமல் செய்கையில் காட்டுவார்கள்.  கணவன், மனைவிக்கிடையில்  இணக்கமான போக்கு காண்பது சிரமம். 
 
பெண்களுக்கு வீண்கவலைகள், எதிர்பாராத அலைச்சல் ஏற்படலாம்.  எதையும் திட்டமிட்டு செய்வது நன்மை தரும். கலைத் துறையினருக்கு தொழில் வாக்கு  வன்மையால் சிறப்பாக நடக்கும். பழைய பாக்கிகள் வசூலாகலாம். 
 
அரசியல்துறையினர் நிதானமாக பேசுவது நன்மை தரும். மகிழ்ச்சி உண்டாகும். வாழ்க்கையில் நல்ல திருப்பம் ஏற்படும். மாணவர்களுக்கு கல்வி பற்றிய பயம்  ஏற்பட்டு நீங்கும். தெளிவாக பாடங்களை படிப்பது நல்லது.
 
அவிட்டம் 3, 4 பாதங்கள்: பண வரவுகள் ஏற்ற இறக்கமாக இருந்தாலும் செலவுகள் கட்டுக்குள் இருக்கும். குடும்பத்தில் சுபிட்சமான நிலையிருக்கும். கணவன்  மனைவியிடையே சிறு சிறு கருத்து வேறுபாடுகள் ஏற்படும் என்றாலும் ஒற்றுமை குறையாது. பேச்சில் நிதானத்தை கடை பிடிப்பதும் உற்றார் உறவினர்களை  அனுசரித்து நடந்து கொள்வதும் மிகவும் நல்லது. 
 
சதயம்: செய்யும் தொழில் வியாபாரத்தில் சிறப்பான லாபம் அமையும். வெளியூர் வெளிநாட்டு தொடர்புடையவைகளாலும் அனுகூலம் கிட்டும்.  உத்தியோகத்திலிருப்பவர்கள் எதிர்பார்க்கும் உயர்வுகள் கிடைக்கும். உங்கள் திறமைகளை வெளிப்படுத்துவதற்கான சந்தர்ப்பங்கள் உண்டாகும். கொடுக்கல்  வாங்கலில் பெரிய தொகைகளை தவிர்க்கவும். தேவையற்ற பயணங்களை தவிர்ப்பதால் அலைச்சல்கள் குறையும். 
 
பூரட்டாதி 1, 2, 3  பாதங்கள்: உடல் ஆரோக்கியத்தில் சிறு சிறு பாதிப்புகள் தோன்றி மறையும். மறைமுக எதிர்ப்புகளை வெல்லக் கூடிய ஆற்றல் உண்டாகும.;  சற்றே அலைச்சல்கள், சுகவாழ்வில் சோதனைகள் ஏற்பட்டாலும் பண வரவுகள் தேவைக்கேற்றபடி அமையும். அசையும் அசையா சொத்துக்களால் வீண்  செலவுகள் உண்டாகும். 
 
சந்திராஷ்டம தினங்கள்: செப்டமப்ர் 11, 12
 
அதிர்ஷ்ட தினங்கள்: செப்டம்பர் 02, 03
 
பரிகாரம்:  விநாயக பெருமானை தேங்காய் உடைத்து தீபம் ஏற்றி வணங்கி வர வீண் அலைச்சல் குறையும். காரிய தடை நீங்கும். கல்வி அறிவு அதிகரிக்கும்.
 
அதிர்ஷ்ட கிழமைகள்: புதன், வெள்ளி.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்