மீனம்: ஆவணி மாத ராசி பலன்கள்

வியாழன், 16 ஆகஸ்ட் 2018 (15:49 IST)
பூரட்டாதி 4ம் பாதம், உத்திரட்டாதி, ரேவதி - வேகமாக செயல்படும் குணம் கொண்ட மீன ராசியினரே நீங்கள் மற்றவர்கள் மனது அறிந்து செயல்பட்டால் காரியவெற்றி கிடைக்கும். இந்த மாதம் ராசியாதிபதி குரு அஷ்டமஸ்தானத்தில் சஞ்சாரம் செய்கிறார். 

தனஸ்தானத்தைப் பார்க்கிறார். நிலுவையில் இருந்த  பணம் வந்து சேரும். நீண்ட நாட்களாக வாங்க திட்டமிட்ட வாகனம் சொத்து மற்றும் வீட்டிற்கு தேவையான பொருட்களை வாங்குவதில் ஆர்வம் காட்டுவீர்கள்.   பயணங்கள் சாதகமான  பலன் தருவதாக இருக்கும். எதிர்பாராத அதிர்ஷ்டமும் கிடைக்கலாம். உடல் ஆரோக்யம் உண்டாகும். தெய்வ பக்தி அதிகரிக்கும். 
 
தொழில் வியாபாரம் சிறப்பாக நடக்கும். பழைய பாக்கிகள் வசூலாகும். எதிர்பார்த்த கடனுதவி கிடைக்கும்.  வியாபாரத்தை விரிவுபடுத்த முயற்சிகள்  மேற்கொள்வீர்கள். உத்தியோகத்தில் இருப்பவர்கள் வேலைபளு குறைந்து மன மகிழ்ச்சியடைவார்கள். மேல் அதிகாரிகளின் உதவியும், ஆலோசனையும் கிடைக்கும். புதிய வேலைக்கான முயற்சிகளில் சாதகமான போக்கு காணப்படும். 
 
குடும்பத்தில் இதமான சூழ்நிலை காணப்படும். உறவினர்கள் வருகை அதனால் நன்மையும் இருக்கும். கணவன், மனைவிக்கிடையில் நெருக்கம் அதிகரிக்கும்.   பிள்ளைகளின் அறிவுதிறன் அதிகரிக்கும். ஆனால் அவர்களது உடல்நலத்தில் கவனம் தேவை. 
 
பெண்களுக்கு பயணங்களின் மூலம் நன்மை உண்டாகும். முயற்சிகள் நல்ல பலன் தரும். பணவரத்து திருப்தி தரும். கலைத்துறையினருக்கு ஆன்மிகத்தில்  நாட்டம் உண்டாகும். மனோ தைரியம் அதிகரிக்கும். அரசியல்துறையினர் சந்தோஷமான நிலை காணப்படும். மேலிடத்தில் இருந்து வந்த கருத்து வேற்றுமை  நீங்கும். மாணவர்களுக்கு கல்வியில் முன்னேற்றம் காணப்படும். கஷ்டமாக தோன்றிய பாடங்களை எளிதாக படித்து முடிப்பீர்கள். 
 
பூரட்டாதி 4ம் பாதம்: தெய்வ தரிசனங்களுக்காக பயணங்கள் மேற்கொள்ளும் வாய்ப்பு உண்டாகும். உத்தியோகஸ்தர்களுக்கு பணியில் நிம்மதியான  நிலையிருக்கும். தொழில் வியாபாரம் செய்பவர்களுக்கு எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். எதிர்பார்க்கும் உதவிகள் சில தடைகளுக்குப் பின் கிட்டும்.கடன்கள்  குறையும். 
 
உத்திரட்டாதி: பண வரவுகளுக்கு பஞ்சம் இருக்காது. எடுக்கும் காரியங்களில் வெற்றி கிட்டும். கணவன் மனைவியிடையே ஒற்றுமை பலப்படும். பூர்வீக  சொத்துக்களால் சிறு சிறு விரயங்கள் உண்டாகும். புத்திர வழியிலும் மனக் கவலைகள் ஏற்படும். பொருளாதார மேன்மை சிறப்பாக இருப்பதால் குடும்பத்  தேவைகள்யாவும் பூர்த்தியாகும். 
 
ரேவதி: தொழில் வியாபாரத்தில் சிறப்பான லாபங்கள் அமையும். புதிய கூட்டாளிகள் சேருவார்கள். பண வரவுகள் தேவைக்கேற்றபடி இருக்கும்;. குடும்பத்தில்  தடைபட்டுக் கொண்டிருந்த திருமண சுப காரியங்கள்தடைகளுக்கு பின் கை கூடி மகிழ்ச்சியளிக்கும். சொந்த பூமி, வண்டி வாகனம் போன்றவை வாங்கும்  முயற்சிகளில் கவனம் தேவை. 
 
சந்திராஷ்டம தினங்கள்: ஆகஸ்டு 17, 18 - செப்டம்பர் 13, 14
 
அதிர்ஷ்ட தினங்கள்: செப்டம்பர் 04, 05, 06
 
பரிகாரம்: முருகனை வணங்கிவர எல்லா நன்மைகளும் உண்டாகும். தேவையான நேரத்தில் எதிர்பார்த்த உதவி கிடைக்கும். 
 
அதிர்ஷ்ட கிழமைகள்: ஞாயிறு, வியாழன், வெள்ளி.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்