2016 தமிழ் சினிமா

Webdunia
வியாழன், 15 டிசம்பர் 2016 (16:23 IST)
1. 'ரஜினிக்கு பத்ம விபூஷண்' விருது
 
இந்திய அரசால் வழங்கப்படும் நாட்டின் இரண்டாவது உயரிய சிவிலியன் விருதான பத்ம விபூஷன் விருது, நடிகர் ரஜினிகாந்த்  உள்ளிட்டோருக்கு வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 2016 ஆம் ஆண்டிற்கான பத்ம விருதுகள் தொடர்பான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. ரஜினிக்கு விருது கொடுப்பதால் அந்த விருதுக்குதான் பெருமை என்று மத்திய அமைச்சர் பிரகாஷ்  ஜவடேகர் கூறியுள்ளார்.

 
பாரத பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களுக்கு 'பத்மபூஷன்' விருது  வழங்க முடிவு செய்திருப்பதாக தகவல்கள் வெளிவந்துள்ளது.
 
ஜனவரி 26ஆம் தேதி குடியரசு தினவிழாவில் இந்தியா முழுவதிலும் இருந்து மொத்தம் 148 கலைஞர்களுக்கு பத்ம விருதுகள்  வழங்கப்பட உள்ளதாகவும், இதில் இந்தியாவின் சூப்பர் ஸ்டார் என்ற பெயர் பெற்ற ரஜினிகாந்த் அவர்களுக்கு பத்மபூஷன் விருது  வழங்கவிருப்பதாகவும் கூறப்படுகிறது.
 
ரஜினிகாந்த் தவிர முன்னாள் துணை பிரதமர் எல்.கேஅத்வானி, பாபா ராம்தேவி, ரவிஷங்கர், அமிதாப்பச்சன் ஆகியோர்களும்  பத்ம விருதுகள் பெறும் முக்கியமானவர்கள் ஆகும்.
 
மேலும் பழம்பெரும் பாலிவுட் நடிகர் திலீப்குமார், இயக்குனர் சஞ்சய் லீலா பன்சாலி, சல்மான்கானின் தந்தை சலீம்கான்,  ஆகியோர்களும் பத்ம விருது பெறுபவர்களின் லிஸ்ட்டில் உள்ளனர்.
 
குடியரசு தலைவர் மாளிகையில் பத்ம விருதுகள் வழங்கும் விழா ஏப்ரல் 12 ஆம் தேதி நடைபெற்றது. இந்த விழாவில் நடிகர்  ரஜினிகாந்த், மருத்துவர் சாந்தா ஆகியோருக்கு பிரணாப்முகர்ஜி பத்மவிபூசன் விருதினை வழங்கி கவுரவித்தார். டென்னிஸ்  வீராங்கனை சானியா மிர்சாவிற்கு பத்மபூசன் விருது வழங்கப்பட்டது.
 
இந்தியாவில் குடிமக்களுக்கு வழங்கப்படும் இரண்டாவது மிகப்பெரிய விருது பத்ம விபூஷண். ஏற்கெனவே பத்ம பூஷண் விருது  பெற்றுள்ள நடிகர் ரஜினிகாந்துக்கு நடப்பாண்டு பத்ம விபூஷண் வழங்கி கவுரவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

2. தமிழ் சினிமாவில் மிகப்பெரிய அளவில் புரட்சியை ஏற்படுத்திய காபாலி படம்!!
 
கலைப்புலி தாணு தயாரிப்பில், ரஞ்சித் இயக்கிய கபாலி படம் ரசிகர்களிடையே மிகப்பெரிய எதிர்படுத்தியது. சூப்பர் ஸ்டார்  ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான ‘கபாலி’ மிகப் பிரமாண்டமாக உருவாகியுள்ளது. இதில் ரஜினிகாந்த், ராதிகா ஆப்தே,  கலையரசன், கிஷோர் குமார், தன்ஷிகா ஆகியோர் நடித்துள்ள திரைப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்திருந்தார்.

 
கபாலி படம் வெற்றி பெறுவதற்காக ரஜினி மகள் சௌந்தர்யா காளஹஸ்தி கோவிலுக்கு சென்று, அங்கு ராகு கேதுவுக்கு சிறப்பு  பூஜை நடத்தினார்.
 
இணையதளத்தில் காபாலி படத்தின் இடப்பெற்றுள்ள நெருப்புடா பாடல் 50 லட்சம் பார்வைகளை கடந்தது. உலகம் ஒருவனுக்கா  பாடல் 19 லட்சங்களையும், வானம் பார்த்தேன் பாடல் 11 லட்சம் பார்வைகளையும், வீர துரந்தா 10 லட்சம் பார்வைகளையும்,  மாய நதி 10 லட்சம் பார்வைகளையும் கடந்தது. மொத்தமாக 1 கோடி பார்வைகளை கபாலி பாடல்கள் கடந்து சாதனை  படைத்தது.
 
கபாலி ஜுலை 1 திரைக்கு வரும் என எதிர்பார்க்கப்பட்டது. பிறகு ஜுலை 15 என்றனர். பிறகு மீண்டும் ஒருவாரம் தள்ளிப் போய்,  ஜுலை 22 என்றனர். இப்போது வைரலாக பரவிவரும் வெளிநாட்டு போஸ்டர்களால் மீண்டும் தேதியில் மாற்றமா என்ற  சந்தேகத்தில் ரசிகர்களுக்கு ஒருவழியாக கபாலி 29 வெளியீடு என வெளிநாடுகளில் விளம்பரம் செய்கின்றனர். ஆக, ஜுலை 29  கபாலியை ரசிகர்கள் எதிர்பார்க்கலாம் என்ற செய்திகள் வெளியாயின.
 
இதனை தொடர்ந்து ‘கபாலி’ படம் உலகமெங்கும் வருகிற ஜுலை 22-ந் தேதி வெளியாகவிருக்கிறது. இப்படத்தின்  டிக்கெட்டுகள் வெளிநாடுகளில் விநியோகிக்கப்பட்டு, பரபரப்பாக விற்பனையாகி வருகின்றன. கபாலி படத்தின் டிக்கெட்கள் அரசு நிர்ணயித்ததைவிட பல மடங்கு அதிக விலையில் திரையரங்கு கவுண்டரிலேயே விற்கப்பட்டது.
 
நடிகர் ரஜினிகாந்த் நடித்து நடித்துள்ள கபாலி திரப்படம்  உலகமெங்கும் 5000 திரை அரங்கில் வெளியானது. கபாலி வெளியாகி  தாறுமாறாக ஓடிக் கொண்டிருக்கிறது. இந்நிலையில், கபாலியில் வாய்ப்பு கிடைத்தது பற்றியும், ரஜினியுடன் நடித்த  அனுபவங்கள் குறித்தும் பகிர்ந்து கொண்டார் ராதிகா ஆப்தே.

 
இந்திய திரையுலகில் இதுவரை எந்த திரைப்படமும் நிகழ்த்தாத வசூல் சாதனையை கபாலி படம் நிகழ்த்தியுள்ளது. பிரீமியர்  ஷோ என அழைக்கப்படும் சிறப்பு காட்சியில் 1.4 மில்லியன் டாலர் வசூல் செய்து, இதற்கு முன் பிரீமியர் ஷோவில் சாதனை  செய்த பாகுபலியின் வசூலை முறியடித்துள்ளது கபாலி.
 
தமிழகத்தை பொறுத்தரை நேற்று ஒரே நாளில் ரூ.20 கோடியும், இதையும் சேர்த்து, உலக அளவில் ஒட்டுமொத்தமாக ரூ.60  கோடியை கபாலி படம் வசூலித்துள்ளது என்று கூறப்படுகிறது. வசூலை பொறுத்தவரை இப்படம் மாபெரும் சாதனையை  ஏற்படுத்தியிருக்கிறது."
 
பாகுபலியில் ரசிகர்கள் எதிர்பார்த்த அனைத்தும் அவர்கள் எதிர்பார்த்ததைவிட அதிக அளவில் இருந்தன. அதன்  கதையும்,  பிரமாண்டமும் இந்தி ரசிகர்களையும் கவர்ந்தது. அதனால், பாகுபலியின் இந்தி பதிப்பு மட்டும் தனியாக  100 கோடிகளை தாண்டி  வசூலித்தது.
 
கபாலி படம் வெளியாவதற்கு முன்பே ரூ.200 கோடி வசூல் செய்துவிட்டது என்றார் தாணு. இந்நிலையில், வெளியான இரண்டு  நாட்களில் மட்டும் இந்தியாவில் ரூ.250 கோடி வசூல் செய்துவிட்டது என்று கூறப்படுகிறது. அதுவும் தமிழ்நாட்டில் மட்டும் ரூ.100  கோடியும், இதர மாநிலங்களில் ரூ.150 கோடியும் வசூல் செய்துள்ளதாம். வெளிநாடுகள் உள்பட முதல் வார வசூலாக ரூ.350  கோடி வசூல் செய்து பாக்ஸ் ஆபிஸ் ஹிட் கொடுத்துள்ளது. இந்நிலையில் பாகுபலி, சுல்தான் மற்றும் ஹேப்பி நியூ இயர் ஆகிய  மூன்று படங்களில் வசூலை கபாலி முறியடித்துள்ளது. பாகுபலி படம் இந்தியாவில் மட்டும் ரூ.42.1 கோடியும், சுல்தான் படம்  ரூ.36.54 கோடியும், ஹேப்பி நியூ இயர் ரூ.44.97 கோடியும், பிரேம் ரத்தன் தன் பயோ ரூ.40.35 கோடியும் வசூல் செய்திருந்தது  குறிப்பிடத்தக்கது. இப்படியொரு வசூலை எந்த தமிழ்ப் படமும் இதுவரை பெற்றதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
 
3. தமிழ் நாட்டின் பிரபல திரைப்படப் பாடல் ஆசிரியர் நா.முத்துக்குமார் மறைவுச் செய்தி
 
தமிழ் நாட்டின் பிரபல திரைப்படப் பாடல் ஆசிரியாரான நா.முத்துகுமார் இன்று உயிரிழந்தார். அவருடைய இறப்பை தொடர்ந்து  திரைத்துறை பிரபலங்கள் மற்றும் அரசியல் தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

 
அவரின் இரங்கல் செய்தியில், இலக்கியம் அறிந்த ஒரு பாடலாசிரியனைக் காலம் காவுகொண்டுவிட்டது. நா.முத்துக்குமாரின்  மறைவுச் செய்தி சற்றும் எதிர்பாராதது. அவர் குடும்பத்தைப் போலவே என்னாலும் தாங்க இயலாதது. இது சாகும் வயதல்லை;  சாதிக்கும் வயது. தன் பாடல்களுக்கு இரண்டு முறை தேசிய விருதுகள் பெற்றவர். அவர் பெறவேண்டிய மூன்றாவது விருதைக்  காலம் களவாடிவிட்டது.
 
கடந்த சில ஆண்டுகளாகத் தமிழ்த் திரையுலகில் அதிகம் எழுதியவர்; அழகாகவும் எழுதியவர். “மழைமட்டுமா அழகு; வெயில்  கூடத்தான் அழகு” என்று சொன்னவர், “வாழ்வு மட்டுமா அழகு; மரணம் கூடத்தான் அழகு” என்று சொல்லாமல்  சொல்லிவிட்டுப் போய்விட்டார்.
 
தமிழ்க் கவிஞர் உலகம் வாழையடி வாழையாய்ச் செழிக்க வேண்டும் என்று பேராசை கொண்டவன் நான். இன்று இளங்கன்று  ஒன்று தன் வேர்மண்ணோடு வீழ்ந்துவிட்டதே என்று விம்மி நிற்கிறேன். ஒரு நல்ல பாட்டு முடிந்துவிட்டதே என்று  வேதனைப்படுகிறேன்.

 
‘உன் சொந்த ஊர் எது தம்பி’ என்று ஒருமுறை கேட்டேன். “காஞ்சி அண்ணா” என்று சொன்னார். “அண்ணாவே  காஞ்சிதான்” என்றேன். கோவையில் நிகழ்ந்த உலகத் தமிழ் மாநாட்டில் என் தலைமையின் கவிதைபாட வந்தார். “சிறந்த  வரிகளை அரங்கில் மீட்டு; நீ பிறந்த ஊர் காஞ்சி என்பதைக் காட்டு” என்று அவரை அறிமுகம் செய்தேன். இன்று மரணம் அவர்  மெளனத்தையே கவிதையாக்கிவிட்டது. அவர் வாழ்ந்த பெருமையை அவர் பாடிய பாடல்கள் பாடிக்கொண்டேயிருக்கும்.
 
நா.முத்துக்குமாரை இழந்து வாடும் குடும்பத்தார்க்கும், கலை உலகத்துக்கும் என் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறேன்.  மரணத்தின் சபையில் நீதி இல்லை என்பதை மறுபடி உறுதிப்படுத்திக்கொள்கிறேன்.
 
தி.மு.க தலைவர் கருணாநிதி தனது முகநூல் பக்கத்தில் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், தமிழ்த் திரை உலகில்  தன்னுடைய பாடல்களால் தனி முத்திரை பதித்த கவிஞர் முத்துக்குமார் "தங்கமீன்கள்" என்ற திரைப்படத்தில் "ஆனந்த யாழை  மீட்டுகிறாய்"" என்ற பாடலுக்காகவும் "சைவம்" திரைப்படத்தில் "அழகே அழகே" என்ற பாடலுக்காகவும் தேசிய விருதுகள் பெற்ற  கவிஞர்.
 
மு.க ஸ்டாலின் தனது முகநூல் பக்கத்தில் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், 'தங்கமீன்கள்' படத்தில் இவர் எழுதிய  "ஆனந்த யாழை மீட்டுகிறாய் பாடலுக்கும்", 'சைவம்' படத்தில் எழுதிய "அழகே அழகே" பாடலுக்கும் தேசிய விருது பெற்ற  கவிஞர். 2005-இல் தமிழக அரசின் சிறந்த பாடலாசிரியர் விருதினையும், பல பிலிம்பேர் விருதுகளையும் பெற்று தமிழ்  திரையுலகின் சக்ரவர்த்தியாக திகழ்ந்த கவிஞர் நா முத்துகுமாரின் இழப்பு அவரது குடும்பத்தினருக்கும், தமிழ்  திரையுலகத்திற்கும் பேரிழப்பு.
 
உலக நாயகன் கமல் ஹாசன் ட்விட்டரில் இரங்கல்: ''நா.முத்துகுமார் 41வது வயதில் இறந்துவிட்டார். தமிழில் உள்ள முக்கிய  கவிஞர்களில் அவரும் ஒருவர். சினிமாவுக்கும் பாடல்களை எழுதியுள்ளார். இன்னும், கொஞ்சம் வாழ்ந்திருந்தால் நான் மேலே  சொன்ன அறிமுகத்துக்கு தேவை இருந்திருக்காது''.
 
இசையமைப்பாளர் டி.இமான் இரங்கல் செய்தியில், ''நா.முத்துகுமாரின் மறைவினால் அதிர்ச்சியில் இருக்கிறேன். பல  பாடல்களில் அவருடன் இணைந்துள்ளேன். அழகான மேலும் ஒரு படைப்பாளியை இந்த தருணத்தில் நாம் இழந்துவிட்டோம்''.  இவ்வாறு பல பிரபலங்களும் அவரின் மறைவு குறித்து தங்களின் இரங்கலை வெளிபடுத்தினர்.
 
4. இளையராஜா 1000 படங்களுக்கு இசையமைத்து சாதனை!!

ஆயிரம் படங்களுக்கு இசையமைத்துள்ள இளையராஜாவை கவுரவப்படுத்தும் விதமாக ‘இளையராஜா ஆயிரம்’ என்னும்  மாபெரும் இசை நிகழ்ச்சி மற்றும் பாராட்டு விழா சென்னை நந்தனம் ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் நேற்று முன்தினம்  நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியை இளையராஜா மியூசிக் அண்ட் மேனேஜ்மென்ட் நிறுவனமும், விஜய் டிவியும் இணைந்து  நடத்தியது.


 
அவ்விழாவின் சில முக்கிய துளிகள்: 
 
பின்னணி பாடகிகள் இணைந்து 'குரு பிரம்மா' என்ற பாடலையும், 'ஜனனி ஜனனி' என்ற பாடலையும் நிகழ்ச்சியின் துவக்கமாக  பாடினார்கள்.
 
இளையராஜாவை அறிமுகப்படுத்திய பஞ்சு அருணாச்சலம் "ஒரு காலத்தில் தமிழகத்தின் மூலை முடுக்கெல்லாம் இந்தி இசை  ஆக்கிரமித்து இருந்தது. அப்போது நான் புதிதாக இசையமைப்பாளர் ஒருவரை தேடி வந்தேன். அப்போது கிடைத்தவர் தான்  இளையராஜா. இவருடைய பாடல்களை எல்லாம் கேட்டு, அதற்காக நான் எழுதிய கதை தான் 'அன்னக்கிளி'. இந்தி இசையை  தமிழகத்தில் இருந்து ஒடவைத்தவர் இளையராஜா தான். அப்படத்தின் வெற்றிவிழா மதுரை தமுக்கம் மைதானத்தில்  நடைபெற்றது. அப்போது மாட்டு வண்டியில் வந்து பெரும் கூட்டம் இவருடைய நிகழ்ச்சியைக் கண்டு களித்தார்கள்" என்று  தெரிவித்தார்.
 
பின்னணி பாடகிகள் சுசீலா, உமா, சைலஜா, சித்ரா, ஜென்ஸி ஆகியோர் இளையராஜாவின் இசைக்கு பாடிய தங்களது  அனுபவத்தை பகிர்ந்து கொண்டார்கள்.

 
பாடகர் மனோ "இந்த வாழ்க்கை இளையராஜா போட்ட பிச்சை" என்று தனது பேச்சில் குறிப்பிட்டார். தொடர்ந்து "மாங்குயிலே",  "இளமை என்னும் பூங்காற்று" ஆகிய பாடல்களைப் பாடினார்.
 
பலத்த கரகோஷத்திற்கு இடையே மேடையில் தோன்றினார் எஸ்.பி.பாலசுப்ரமணியம். "நான் இளையராஜாவை பற்றி என்ன  பேசுவது? அவருடைய பாடல்களில் 90% ஆண் குரல் நான் பாடினது தான். ஆகையால் நான் பாடினால் போதும் என  நினைக்கிறேன்' என்று பாடத் தொடங்கினார்.
 
"என்ன சத்தம் இந்த நேரம்", 'ஓ ப்ரியா ப்ரியா', 'இளைய நிலா பொழிகிறதே', 'சுந்தரி கண்ணால் ஒரு சேதி',  'ஜோதிலேகே(கன்னடம்)' ஆகிய பாடல்களைப் பாடி அனைவரையும் இசை வெள்ளத்தில் மூழ்கச் செய்தார்.
 
இளைய நிலா பொழிகிறதே' என்ற பாடலை பாடி முடித்தவுடன், "இப்பாடலின் பின்னணி இசையில் ப்ளூட் இசை ரொம்ப  சாதாரணமாக தெரியும். ஆனால் அதை யாராலும் மறுபடியும் கொண்டு வர முடியாது. அது தான் இளையராஜா!" என்று  குறிப்பிட்டார் எஸ்.பி.பாலசுப்ரமணியம்.
 
இளையராஜாவின் இசைச் சாதனையைப் பாராட்டி இந்நிகழ்ச்சியில் அவருக்கு லக்ஷ்மி நாராயணா சர்வதேச விருது  வழங்கப்பட்டது. எல்.சுப்பிரமணியம் இந்த விருதை வழங்கினார்.
 
5. வெற்றிமாறன் இயக்கத்தில் வெளிவந்த விசாரணை திரைப்படம் ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரை!!
 
வெற்றிமாறன் இயக்கத்தில் வெளிவந்த விசாரணை திரைப்படம் ஆஸ்கர் விருதுக்கு இந்தியாவின் சார்பாக  பரிந்துரைக்கப்பட்டுள்ளது. சிறந்த வெளிநாட்டு திரைப்படப் பிரிவுக்காக இத் திரைப்படம், இந்தியாவில் இருந்து அதிகாரபூர்வமாக  தேர்வு செய்யப்பட்டு அனுப்பப்படுகிறது.


 
ஆட்டோ ஓட்டுநர் எழுதிய நாவலை...: கோவை ஆட்டோ ஓட்டுநர் சந்திரகுமார் எழுதிய "லாக்கப்' என்ற நாவலைத் தழுவி  இயக்குநர் வெற்றிமாறன் இயக்கிய "விசாரணை' திரைப்படம், சர்வதேச அளவில் கவனத்தை ஈர்த்தது. தேசிய விருதுகள் என  இந்திய அளவிலும் இப்படம் அங்கீகாரம் பெற்றது. வெனிஸ் திரைப்பட விழாவில் திரையிடப்பட்ட முதல் தமிழ்த் திரைப்படம்  என்ற பெருமையையும் இத்திரைப்படம் பெற்றது. இந்நிலையில் இன்னொரு சிறப்பை பெறும் வகையில் ஆஸ்கர் விருதுக்கு  இந்திய அரசின் சார்பில் இத்திரைப்படம் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
 
அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் 27-ஆம் தேதி நடக்கவுள்ள 89-ஆவது ஆஸ்கரில் சிறந்த வெளிநாட்டு மொழி திரைப்படப் பிரிவில்  இப்படம் போட்டியிட உள்ளது. இந்தியத் திரைப்பட கூட்டமைப்பின் தலைவர் கேத்தன் மேத்தா, இந்த ஆண்டுக்கான சிறந்த  வெளிநாட்டு திரைப்படத்துக்கான ஆஸ்கர் விருது பிரிவு போட்டிக்கு, இந்தியாவில் இருந்து விசாரணை திரைப்படம்  தேர்ந்தெடுக்கப்பட்டு அனுப்பப்படுவதாக அறிவித்துள்ளார். இந்திய மொழிகளில் வெளியான 29 படங்கள் அடங்கிய பட்டியலில்  இருந்து விசாரணை படம் இறுதி செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.


 
 
வெற்றிமாறன் மகிழ்ச்சி: 
 
ஆஸ்கர் விருதுக்கு விசாரணை திரைப்படம் பரிந்துரைக்கப்பட்டது குறித்து இயக்குநர் வெற்றிமாறன் கூறியது: ஆஸ்கர்  விருதுக்கு விசாரணை திரைப்படம் பரிந்துரைக்கப்பட்ட நிகழ்வு, அடுத்தகட்டத்துக்குச் செல்வதற்கு தன்னை ஊக்கப்படுத்தி  இருக்கிறது. இது எனக்கு முக்கியமான தருணம் என்பதால் மகிழ்ச்சியில் உள்ளேன் என்று தெரிவித்தார்.
அட்டக்கத்தி தினேஷ், சமுத்திரக்கனி, ஆனந்தி உள்ளிட்டோர் நடித்து வெளியான இப்படம், நடிகர் தனுஷ் மற்றும் வெற்றிமாறன்  இணைந்து தயாரித்த படமாகும். இப்படத்தை லைக்கா நிறுவனம் வெளியிட்டது.
அடுத்த கட்டுரையில்