இதற்கு பதில் சொல்லுங்க மிஸ்டர் ஜெயக்குமார் - திமுக எம்.எல்.ஏ ஆவேசம்

Webdunia
சனி, 26 மே 2018 (10:30 IST)
அமைச்சர் ஜெயக்குமார், என் மீது சுமத்திய குற்றச்சாட்டை நிரூபித்தால் பதவி விலக தயார் என்று திமுக எம்.எல்.ஏ கீதா ஜீவன் சவால் விடுத்துள்ளார்.
தூத்துக்குடியில் செயல்பட்டு கொண்டிருக்கும் ஸ்டெர்லைட் ஆலையின் விரிவாக்கத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடந்தது. இந்த போராட்டத்தில் போராட்டக்காரர்களை கலைக்க துப்பாக்கி சூடு நடத்தப்பட்டது. இதில் இதுவரை 13 பேர் பலியாகியுள்ளனர். மேலும், பலர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
 
இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் ஜெயக்குமார் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான பேரணிக்கு தலைமை தாங்கும் தி.மு.க. எம்.எல்.ஏ. கீதா ஜீவன், ஸ்டெர்லைட் ஆலையில் காண்டிராக்ட் எடுத்திருப்பதாகவும், அவர் பெயரில் 600 வண்டிகள் ஓடுவதாகவும் கூறியிருந்தார்.
இதற்கு பதிலளிக்கும் வகையில் பேசிய கீதா ஜீவன், அமைச்சர் ஜெயக்குமார் கூறியது அப்பட்டமான பொய் என்றும், அவர் கூறியதை நிரூபித்தால் நான் பதவி விலக தயார் என்று அமைச்சர் ஜெயக்குமாருக்கு பகிரங்க சவாலை விடுத்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்