மாடுபிடி வீரர்களுக்கு மாதம் ரூபாய் 1000 உதவித்தொகை வழங்க எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தல்!

Sinoj

புதன், 17 ஜனவரி 2024 (16:35 IST)
ஜல்லிக்கட்டு மாடுபிடி வீரர்களுக்கு மாதம் ரூபாய் 1000 உதவித்தொகை வழங்கப்படும் என தனது தேர்தல் அறிக்கையில் தெரிவித்திருந்ததை உடனடியாக செயல்படுத்த வேண்டும்  என எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
 

தமிழர்களின் முக்கிய பண்டிகையான பொங்கலை முன்னிட்டு ஜல்லிக்கட்டு போட்டி நடந்தப்பட்டு  வருகிறது.  இந்த நிலையில்  ஜல்லிக்கட்டு மாடுபிடி வீரர்களுக்கு மாதம் ரூபாய் 1000 உதவித்தொகை வழங்கப்படும் என  திமுக 
தனது தேர்தல் அறிக்கையில் தெரிவித்திருந்தது.
 
இந்த  நிலையில், இன்று உழவர் திருநாளை முன்னிட்டு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளதாவது:

"உழுதுண்டு வாழ்வாரே வாழ்வார்மற் றெல்லாம் தொழுதுண்டு பின்செல் பவர்" எனும் கூற்றக்கு ஏற்ப உலகை வழிநடத்தும் உழவுத் தொழில் செய்யும் உழவர் பெருமக்களுக்கும், அந்த உழவுக்கு துணை நிற்கும் மாடுகளுக்கும் இந்த உழவர் திருநாளில் எனது நன்றிகளையும் வணக்கங்களையும் தெரிவித்துக் கொள்வதுடன்,

ஆட்சிக்கு வந்து மூன்றாண்டுகள் ஆன இந்த விடியா திமுக அரசு தமிழகத்தின்  ஜல்லிக்கட்டு மாடுபிடி வீரர்களுக்கு மாதம் ரூபாய் 1000 உதவித்தொகை வழங்கப்படும் என
தனது தேர்தல் அறிக்கையில் தெரிவித்திருந்ததை உடனடியாக செயல்படுத்த வேண்டும் என தமிழக அரசை வலியுறுத்துவதாக’’  தெரிவித்துள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்