கோவில் கட்டுமான பணியில் திடீர் விபத்து.. 15-க்கும் மேற்பட்டோர் படுகாயம்..!

Siva

ஞாயிறு, 10 ஆகஸ்ட் 2025 (08:22 IST)
நாக்பூரில் உள்ள ஒரு கோவிலில் நுழைவாயில் கட்டப்பட்டு வந்த அந்த கட்டிடத்தின் ஒரு பகுதி இடிந்து விழுந்ததில் 15-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.
 
நாக்பூரில் உள்ள கோராடி கோயிலுக்காக பணிகள் நடந்து கொண்டிருந்தபோது திடீரென கட்டிடத்தின் ஒரு பகுதி இடிந்து விழுந்ததால் சில தொழிலாளர்கள் சிக்கியிருக்கலாம் என அஞ்சப்பட்டது. ஆனால், இதுவரை உயிரிழப்புகள் எதுவும் பதிவாகவில்லை.
 
முதல்கட்ட விசாரணையில் 15 முதல் 16 பேர் சிறிய காயங்களுடன் மருத்துவ சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மேலும் இடிபாடுகள் இயந்திரங்களின் உதவியுடன் அகற்றப்பட்டு வருகின்றன.
 
சம்பவத்தை நேரில் பார்த்த ரத்னதீப் ரங்காரி, "நாங்கள் 9 பேரை காப்பாற்றினோம். அவர்களுக்கு காயங்கள் ஏற்பட்டுள்ளன, மருத்துவமனைகளுக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர். கான்கிரீட் தகடு இடிந்து விழுந்தபோது மக்கள் கீழே விழுந்தனர்என்று கூறினார்.
 
இதுவரை யாரும் இங்கு சிக்கியிருப்பதாகத் தெரியவில்லை, ஆனால் முதலில் இடிபாடுகளை அகற்ற வேண்டும், அதற்கு பின்னரே ஒரு கருத்தை சொல்ல முடியும். கட்டுமானப் பணிகள் நடந்து கொண்டிருந்தன, இயந்திரங்களின் அதிர்வு காரணமாக அது அனைத்தும் ஒரே நேரத்தில் இடிந்து விழுந்ததாக கூறப்படுகிறது என்று மீட்புக்குழுவின் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
 
Edited by Siva

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்