ஏஐஎம்ஐஎம் கட்சியின் தலைவரும், மூத்த நாடாளுமன்ற உறுப்பினருமான அசதுதீன் ஒவைசி வரவிருக்கும் ஆசிய கோப்பை இந்தியா-பாகிஸ்தான் கிரிக்கெட் போட்டியை தான் பார்க்க மாட்டேன் என்று கூறியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
"துபாயில் பாகிஸ்தானுடன் இந்தியா ஒரு கிரிக்கெட் போட்டியில் விளையாடுவது எனக்கு ஆச்சரியத்தையும் அதிர்ச்சியையும் தருகிறது. நான் அதை பார்க்க மாட்டேன். பேச்சுவார்த்தையும் பயங்கரவாதமும் ஒன்றாக இருக்க முடியாது, தண்ணீரும் இரத்தமும் ஒன்றாக பாய முடியாது என பிரதமர் பலமுறை கூறியிருக்கும்போது, எப்படி நீங்கள் கிரிக்கெட் விளையாட்டை அனுமதிக்கிறீர்கள்?" என்று அவர் கேள்வி எழுப்பினார்.
பயங்கரவாதம் ஒரு புதிய மதமாக மாறிவிட்டது. இந்த பயங்கரவாதிகள் மதத்தின் பெயரால் அனைத்துக் குற்ற செயல்களையும் செய்கிறார்கள். எனவே பயங்கரவாதத்திற்கு முடிவு கட்டும் வரை இந்தியா, பாகிஸ்தானுடன் கிரிக்கெட் விளையாட கூடாது என்றும் அவர் தெரிவித்தார்.