பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் அதிமுக மாவட்ட செயலாளர் கூட்டம் சென்னையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது. அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் மாவட்ட செயலாளர்கள், அதிமுக தலைமைக் கழக நிர்வாகிகள் பங்கேற்றனர்.
பூத் கமிட்டிக்கான காலக்கெடு முடிந்த நிலையில், இன்றைய தினத்தில் இதுதொடர்பாக விவாதிக்கப்பட்டது என்று சொல்லப்படுகிறது. மக்களவை தேர்தலுக்கான கூட்டணி குறித்தும், யாரை வேட்பாளராக நிறுத்தினால் வெற்றி பெறலாம் என்பது குறித்தும் கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது. கூட்டத்தில் பேசிய எடப்பாடி பழனிச்சாமி, பொதுத்தேர்தலில் கண்டிப்பாக கூட்டணி அமைப்போம் என்றார்.