முன்னேற்றத்தை பாத்து வயிற்றெரிச்சல்! அச்சுறுத்தலுக்கு அடிபணிய மாட்டோம்! - அமெரிக்காவுக்கு வெங்கயா நாயுடு கண்டனம்!

Prasanth K

ஞாயிறு, 10 ஆகஸ்ட் 2025 (09:25 IST)

இந்தியா மீது அமெரிக்க அதிபர் ட்ரம்ப் விதித்துள்ள 50 சதவீத வரிக்கு முன்னாள் துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு கண்டனம் தெரிவித்துள்ளார்.

 

ரஷ்யாவிடம் இந்தியா கச்சா எண்ணெய் வாங்குவதை நிறுத்துமாறு அமெரிக்கா சொல்லியும் இந்தியா கேட்காததால், 50 சதவீதம் வரி விதித்துள்ளார் அமெரிக்க அதிபர் ட்ரம்ப். ஆனால் இந்த மிரட்டலுக்கு அடிபணிய மாட்டோம் என இந்தியா திட்டவட்டமாக உள்ளது.

 

இதுகுறித்து பேசிய முன்னாள் துணை குடியரசு தலைவர் வெங்கய்யா நாயுடு “நாட்டின் எரிசக்தி பாதுகாப்பை உறுதி செய்வதிலும், தேசிய நலனிலும் உறுதியாக நிற்போம். எந்த அச்சுறுத்தலுக்கும் அடிபணிவது என்ற பேச்சுக்கே இடமில்லை. இந்தியாவிடம் அச்சுறுத்தல்கள் எடுபடாது. 

 

இந்தியா உலகளாவிய அளவில் பொருளாதாரத்தில் மிகப்பெரும் முன்னேற்றத்தை அடைந்து வருவதுடன் அங்கீகாரத்தையும் பெற்று வருகிறது. நமது வளர்ச்சியை சிலரால் ஜீரணிக்க முடியவில்லை. பொறாமை கொள்கின்றனர். 

 

உலக அளவில் மூன்றாவது பெரிய பொருளாதார நாடாக முன்னேறி வரும் இந்தியா, விவசாயிகள், ஆய்வாளர்கள், இளைஞர்களின் பங்களிப்பால் பல உயரங்களை எட்டும். அமெரிக்கா ரஷ்யாவிடம் யுரேனியம், உரம் என பலவற்றை இறக்குமதி செய்யும் நிலையில் இந்தியா உள்ளிட்ட நட்பு நாடுகளுக்கு விரிவிதிப்பது நியாயமா?

 

நாம் அமெரிக்காவின் நண்பர்கள். உலகின் பழமையான ஜனநாயக நாடான அமெரிக்காவை நாம் மதிக்கிறோம். போற்றுகிறோம். இந்த வர்த்தக பதற்றம் இருந்தபோது பிற நாடுகளுடன் இணைந்து பணியாற்றவே இந்தியா விரும்புகிறது” என கூறியுள்ளார்.

 

Edit by Prasanth.K

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்