பொங்கல் தொகுப்புடன் ரொக்கப் பணம் பற்றி அறிவிக்காத விடியா திமுக அரசு- இபிஎஸ் கண்டனம்

Sinoj

வியாழன், 4 ஜனவரி 2024 (14:04 IST)
முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையியான திமுக அரசு, தைப்பொங்கலை முன்னிட்டு வழங்கப்படும், 2024-பொங்கல் தொகுப்புடன் ரொக்கப் பணம் பற்றி அறிவிக்காத நிலையில், முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி கண்டனம் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து, அதிமுக பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளதாவது:

''தமிழர் திருநாளாம் தைப்பொங்கலை முன்னிட்டு வழங்கப்படும், 2024-பொங்கல் தொகுப்புடன் ரொக்கப் பணம் பற்றி அறிவிக்காத விடியா திமுக அரசுக்கு கடும் கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறேன்.

இந்த ஆண்டு பொங்கல் திருநாளுக்கு, பொங்கல் தொகுப்பை மட்டும் விடியா அரசு அறிவித்துள்ளது. எனவே, அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் பொங்கல் தொகுப்புடன் ரொக்கப் பணமாக ரூ. 1,000/-ஐ வழங்க வேண்டும் என்றும்; மிக்ஜாம் புயல் மற்றும் கன மழையால் பாதிக்கப்பட்டுள்ள மாவட்டங்களில் வசிக்கும் அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும்,

எண்ணூர் முகத்துவாரத்தில் பரவிய கச்சா எண்ணெய் படலத்தால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட மீனவர் குடும்பங்களுக்கும் பொங்கல் தொகுப்புடன் ரொக்கப் பணமாக ரூ. 5,000/- வழங்க வேண்டும் என்றும், மேலும், இந்த ஆண்டு பொங்கல் பரிசாக வழங்கப்படும் கரும்பு கொள்முதலில் எந்தவிதமான முறைகேடுகளுக்கும் இடம் தராமல், நேரடியாக கரும்பு சாகுபடி விவசாயிகளிடமிருந்து கொள்முதல் செய்ய வேண்டும் என்றும், கரும்புக்கான பணம் இடைத்தரகர்கள் இன்றி, நேரடியாக விவசாயிகளைச் சென்றடைய வேண்டும் என்றும் விடியா திமுக அரசின் முதலமைச்சர் திரு. ஸ்டாலினை வலியுறுத்துகிறேன்'' என்று தெரிவித்துள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்