நான் இல்லாமல் பேச்சுவார்த்தை நடத்துவதா? டிரம்ப் - புதின் பேச்சுவார்த்தைக்கு உக்ரைன் அதிபர் எதிர்ப்பு..!

Mahendran

சனி, 9 ஆகஸ்ட் 2025 (16:48 IST)
ரஷ்யா - உக்ரைன் போரை முடிவுக்கு கொண்டுவருவதற்காக, அமெரிக்க  அதிபர் டொனால்ட் டிரம்ப் மற்றும் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் இருவரும் வரும் ஆகஸ்ட் 15-ஆம் தேதி பேச்சுவார்த்தை நடத்தவிருக்கும் நிலையில், இந்த பேச்சுவார்த்தைக்கு உக்ரைன் அதிபர் வோலோடிமிர் ஜெலென்ஸ்கி கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.
 
உக்ரைன் போரை முடிவுக்கு கொண்டு வருவதற்கான வழிமுறைகள் குறித்து டிரம்ப் மற்றும் புடின் இருவரும் அலாஸ்காவில் பேச்சுவார்த்தை நடத்த இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஆனால், இந்த சந்திப்பில் உக்ரைனின் பிரதிநிதி கலந்துகொள்ளவில்லை.
 
இந்த சந்திப்பிற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ள ஜெலென்ஸ்கி, தனது சமூக வலைத்தள பக்கத்தில், "உக்ரைன் இல்லாத எந்தவொரு தீர்வும் அமைதிக்கு எதிரான தீர்வுகள் ஆகும். இது எங்கள் நாட்டின் இறையாண்மைக்கு உரியது அல்ல. எங்கள் நாட்டின் பிராந்திய இறையாண்மை பேச்சுவார்த்தைக்கு உட்பட்டது அல்ல" என்று திட்டவட்டமாகக் கூறியுள்ளார்.
 
இந்தப் பேச்சுவார்த்தையில் தன்னையும் கலந்துகொள்ள அனுமதிக்க வேண்டும் என்று ஜெலென்ஸ்கி கோரிக்கை விடுத்துள்ளார். இந்த கோரிக்கையை டிரம்ப் - புடின் ஏற்றுக்கொள்வார்களா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
 
Edited by Mahendran
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்