இளைஞர் கழுத்தறுத்து கொலை..! சென்னையில் பயங்கரம்!!

Webdunia
வெள்ளி, 22 டிசம்பர் 2023 (13:21 IST)
சென்னை புளியந்தோப்பு பகுதியில் இளைஞர் ஒருவர் கழுத்தறுத்து படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.


 
சென்னை  புளியந்தோப்பு கன்னிகாபுரம் ரயில்வே ட்ராக் அருகே கழுத்து மற்றும் உடலில் பலத்த காயத்துடன் இளைஞரின் உடல் கிடப்பதாக புளியந்தோப்பு போலீசாருக்கு  தகவல் கிடைத்தது. அதன் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார், அந்த இளைஞரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதைத்தொடர்ந்து நடத்திய விசாரணையில், இறந்த நபர் புளியந்தோப்பு பி.எஸ் மூர்த்தி நகர் பகுதியைச் சேர்ந்த சீனு என்கின்ற சீனிவாசன் (23) என்பது தெரியவந்துள்ளது.

உயிரிழந்த சீனு மீது மூன்று திருட்டு வழக்குகள் உள்ளன. நேற்று மாலை சீனு கொலை செய்யப்பட்டு இருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர். நண்பர்களுக்குள் மது அருந்தும் போது ஏற்பட்ட பிரச்சனையில் சீனு கொலை செய்யப்பட்டாரா அல்லது வேறு ஏதாவது பிரச்சனை உள்ளதா? மேலும் இந்த கொலையில் யார் யாருக்கு தொடர்பு உள்ளது போன்ற பல்வேறு கோணங்களில் புளியந்தோப்பு போலீசார்  விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்