போலீஸே விதிமுறைகளை பின்பற்றாமல் இருக்கக் கூடாது என்று டிஜிபி சங்கர் ஜிவால் அதிரடி உத்தரவை வெளியிட்டுள்ளார்.
தமிழ்நாடு முழுவதும் போக்குவரத்து விதிமுறைகள் சரியான பின்பற்றப்படுவதை உறுதிப்படுத்தவும், விதிமுறைகளை மீறுபவர்களுக்கு அபராதம் விதிக்கவும் போக்குவரத்துக் காவல்துறை செயல்பட்டு வருகிறது. ஆனால் காவலர்களே அந்த போக்குவரத்து விதிமுறைகளை பின்பற்றாமல் இருப்பதும் பொதுமக்களிடையே கேள்விக்கு உள்ளாகி வருகிறது.
இந்நிலையில்தான் டிஜிபி சங்கர் ஜிவால் அதிரடி உத்தரவை வெளியிட்டுள்ளார். அதன்படி, இனி ஹெல்மெட் அணியாமல் இருசக்கர வாகனங்களை ஓட்டு காவல்துறையினரை சஸ்பெண்ட் செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும் போக்குவரத்து விதிமுறைகளை சரியாக பின்பற்றாமல் இருப்பது, பொது இடங்களில் ஒழுங்கீனமான நடவடிக்கைகளில் ஈடுபடுவது போன்ற செயல்களில் காவல்துறையினர் ஈடுபட்டால் அவர்கள் மீது துறைரீதியாக கடும் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என அனைத்து கமிஷனர்கள் மற்றும் எஸ்.பிக்களுக்கும் உத்தரவிடப்பட்டுள்ளது.
டிஜிபி சங்கர் ஜிவாலின் இந்த உத்தரவுக்கு வரவேற்பு தெரிவித்துள்ள பொதுமக்கள், காவல்துறையினரும் விதிகளை முறையாக பின்பற்ற இதுபோன்ற நடவடிக்கைகள் உதவும் என கருத்து தெரிவித்து வருகின்றனர்.
Edit by Prasanth.K