ChatGPTயில் உரையாடுபவர்கள் Thanks மற்றும் Please போன்ற வார்த்தைகள் பயன்படுத்த வேண்டாம் என்று அறிவித்துள்ள சாம் ஆல்ட்மேன் அறிக்கை பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதில், இவ்விரு வார்த்தைகள் பயன்படுத்துவதால் கோடிக்கணக்கில் நஷ்டம் ஏற்படுவதாக அவர் தெரிவித்துள்ளார்.
ஏஐ டெக்னாலஜியின் முக்கிய அம்சமான ChatGPT உலகின் முன்னணி சாட்போட் ஆக இருந்து வருகிறது என்பதும், உலகில் பெரும்பாலானோர் இதை பயன்படுத்துகின்றனர் எனவும், எத்தனை சாட் போட்கள் போட்டிக்கு வந்தாலும், ChatGPTயை' அசைக்க முடியவில்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் Thanks, Please வார்த்தைகள் பயன்படுத்துவதால் பல டேட்டாக்கள் மற்றும் மின்சாரம் செலவாகும். எனவே, இந்த வார்த்தைகள் எந்தவித பயனையும் தராது என்றும், இந்த வார்த்தைகளை தவிர்க்க வேண்டும் என சாம் ஆல்ட்மேன் கூறியுள்ளார். இந்த வார்த்தைகள் இல்லாமல் கேள்வி கேட்டால் மின்சார செலவுகளை மிச்சம் செய்ய உதவும் என அவர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
ChatGPT என்பது ஒரு இயந்திர சாட்போட் என்பதால், Thanks, Please போன்ற வார்த்தைகளை எதிர்பார்க்காமல் செயல்படும் என சாம் ஆல்ட்மேன் குறிப்பிட்டுள்ளார்.