கரகாட்டப் பெண் குளிப்பதை வீடியோ எடுத்த வாலிபர்கள்!!!

Webdunia
திங்கள், 8 ஏப்ரல் 2019 (08:29 IST)
சேலத்தில் வாலிபர்கள் இளம்பெண் ஒருவர் குளிப்பதை மறைந்திருந்து வீடியோ எடுத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கடலூர் மாவட்டம் பண்ருட்டியைச் சேர்ந்தவர் வரதராஜ். இவரது மனைவி துர்கா(27). கரகாட்டம் ஆடி வரும் இந்த பெண் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்று விட்டு அந்த பகுதியில் உள்ள உறவினர் வீட்டில் குளித்தார்.
 
துர்கா குளிப்பதை உறவினரின் மகன் வீடியோ எடுத்துள்ளான். இதனை அவன் தனது நண்பனுக்கும் அனுப்பியுள்ளான். இதுகுறித்து துர்காவிற்கு தெரியவரவே அவர் இதுகுறித்து தனது கணவனிடம் தெரிவித்தார்.
 
இதனால் அதிர்ச்சியடைந்த வரதராஜ் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குபதிவு செய்து  வீடியோ எடுத்த வாலிபரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்