’சந்திராயன் 3’ கவுண்டவுன் அறிவித்த பெண் விஞ்ஞானி காலமானார்.. இஸ்ரோ இரங்கல்..!

Webdunia
திங்கள், 4 செப்டம்பர் 2023 (07:43 IST)
சமீபத்தில் இஸ்ரோ விஞ்ஞானிகள் அனுப்பிய சந்தராயன் 3 என்ற விண்கலம் சந்திரனில் தரையிறங்கி பல்வேறு அபூர்வமான தகவல்களை அனுப்பியது என்பது தெரிந்தது. 
 
இந்த நிலையில் சந்திராயன் 3 விண்கலம் புறப்படுவதற்கு முன் இறுதி நேர கவுண்டன் கொடுத்த பெண் விஞ்ஞானி தமிழகத்தைச் சேர்ந்த வளர்மதி. 50 வயதான இவர் நேற்று காலமானார் 
 
இவர் ஏற்கனவே கடந்த ஜூலை மாதம் 30 ஆம் தேதி சிங்கப்பூர் செயற்கைக்கோளை ஏற்றி சென்ற பிஎஸ்எல்வி  சி 56 ராக்கெட் ஏவிய போது கவுண்டவுன் கொடுத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.  பெண் விஞ்ஞானி வளர்மதி மறைவிற்கு இஸ்ரோ இரங்கல் தெரிவித்துள்ளது.
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்