முகவரிக் கேட்பது போல் செயின் பறிப்பு – தர்ம அடி குடுத்த பொதுமக்கள் !

Webdunia
திங்கள், 29 ஜூலை 2019 (14:27 IST)
பூந்தமல்லி அருகே தனியாக சென்ற பெண்ணிடம் முகவரி கேட்பது போல செயின் பறிக்க முயன்ற திருடனைப் பொதுமக்கள் பிடித்து போலிஸிடம் ஒப்படைத்துள்ளனர்.

பூந்தமல்லி அருகே உள்ள காட்டுப்பாக்கம், பகுதியைச் சேர்ந்தவர் தனலட்சுமி. இவர் திரைத்துறையில் துணை நடிகையாக பணிபுரிந்து வருகிறார். இவர் நேற்றிரவு அருகில் உள்ள கடைக்கு வந்து பொருட்கள் வாங்கிவிட்டு வீட்டுக்குத் திரும்பிச் சென்றுள்ளார். அப்போது டூவீலரில் வந்த ஒருவர் அட்ரஸ் கேட்பது போல அவரிடம் பேசியுள்ளார்.

தனலட்சுமி அட்ரஸ் சொல்லிக்கொண்டு இருக்கும்போது திடீரெனக் கத்தியைக் காட்டி தனலெட்சுமியின் தங்க செயினை பறிக்க அந்த நபர் முயன்றுள்ளார். உடனடியாக சுதாரித்த தனலட்சுமி சாமர்த்தியமாகச் செயல்பட்டு திருடனை மடக்கிப்பிடித்துள்ளார்.இதனால் ஆத்திரமடைந்த அந்நபர் தனலட்சுமியின் கையில் கத்தியால் தாக்கியுள்ளார். அப்போதும் விடாத தனலட்சுமியின் கூச்சலால் மக்கள் அங்கு கூட அனைவரும் அவரை மடக்கிப்பிடித்து போலிஸிடம் ஒப்படைத்தனர்.

போலிஸ் விசாரணையில் கொள்ளையன் ஐயப்பன்தாங்கலை சேர்ந்த சிவக்குமார் என்பது தெரியவந்துள்ளது. அவர் வைத்திருந்த பிரஸ் என அச்சிட்டு மோசடி செய்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்