இதனையடுத்து இவரது கணவர் பூந்தமல்லி காவல்நிலையத்தில் புகார் கொடுத்திருந்தார். பின்னர் போலீஸார் மேற்கொண்ட விசாரணையில் ஸ்ரீபெரும்புதூரில் வசித்துவந்த முரளி (30) என்பவரை சந்திக்கச் சென்றிருப்பது தெரியவந்தது. போலீஸார் அப்பெண்ணை அழைத்து பேச்சு வார்த்தை நடத்தி குழந்தைகள் கணவருடன் வீட்டுக்குச் செல்ல அறிவுறுத்தினர். ஆனால் அவர் வீட்டுக்குச் செல்ல மறுத்துவிட்டு தான் காதலன் முரளியுடன் தான் வாழ்வேன் என்று கூறியதாகத் தெரிகிறது.