ஒரே நாளில் 9 இடங்களில் செயின் பறிப்பு: சென்னையில் பயங்கரம்

திங்கள், 24 ஜூன் 2019 (19:30 IST)
சென்னையில் ஒரே நாளில் 9 இடங்களில் செயின் பறிப்பு சம்பவம் நடந்துள்ள செய்தி பொது மக்களிடம் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

சில நாட்களாகவே சாலைகளில் செயின் பறிப்பு சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. மேலும் சென்னையில் மாதத்திற்கு குறைந்தது 4 செயின் பறிப்பு சம்பவங்களாவது நடைபெறுகிறது என கூறப்படுகிறது.

இந்நிலையில் நேற்று, ஒரே நாளில் சென்னையில் 9 இடங்களில் செயின் பறிப்பு நடந்திருப்பதாக கூறப்படும் செய்தி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதனிடையே தேனாம்பேட்டை சீதாம்மாள் காலனியில் ஒரு பெண் நடந்து சென்றுகொண்டிருந்தபோது, அவருக்கு பின்னால் பைக்கில் வந்த மர்ப நபர்கள் அந்த பெண்ணின் கழுத்திலிருந்து செயினை பறிக்க முயன்றனர்.

ஆனால் அந்த பெண், செயினை இறுக்கமாக பிடித்து கொண்டு சத்தம் போட்டதால், செயினை பறிக்க வந்த மர்ம நபர்கள் தப்பியோடினர்.

கழுத்திலிருந்து செயினை பறிக்க முயன்றதில், நிலைகொள்ள முடியாமல் அப்பெண் கீழே விழுந்தார். இச்சம்பவம் அந்த சாலையில் பொருத்தப்பட்ட சிசிடிவி கேமராவின் மூலம் தெரியவந்துள்ளது.

இதே போல் நேற்று சென்னையில், ஐஸ் ஹவுஸ், கோட்டூர் புறம், பள்ளிக்கரனை, திருமங்கலம், எழும்பூர், ஆதம்பாக்கம் ஆகிய இடங்களிலும் சாலையில் நடந்து சென்று கொண்டிருந்த பெண்களின் நகைகள் பறிக்கப்பட்டுள்ளன.

அடுத்தடுத்து நடக்கும் செயின் பறிப்பு கொள்ளைகளால் சென்னை மக்கள் பெரும் அச்சத்தில் இருக்கின்றனர். மேலும் காவல் துறை, செயின் பறிப்பு கொள்ளைகளைத் தடுப்பதற்கான நடவடிக்கையில் ஈடுபடவேண்டும் எனவும் பொது மக்கள் கேட்டுகொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்