உத்தர பிரதேசத்தில் தனது மனைவியை கள்ளக்காதலனுடன் இருக்கும்போது பிடித்த கணவன் செய்த செயல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தற்போது நாடு முழுவதும் திருமணத்தை மீறிய உறவுகள் பெரும் பிரச்சினையாக மாறி வரும் நிலையில், ஆங்காங்கே இது தொடர்பான குற்ற சம்பவங்களும் செய்திகளாகி வருகின்றன. ஆனால் உத்தர பிரதேசத்தில் நடந்த ஒரு சம்பவம் ஆச்சர்யத்தையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
உத்தர பிரதேச்த்தை சேர்ந்த மனோஜ் என்பவருக்கு ரூபி என்ற பெண்ணுடன் சில ஆண்டுகள் முன்னதாக திருமணமாகியுள்ளது. இருவரும் மகிழ்ச்சியாக வாழ்ந்து வந்த நிலையில் ரூபிக்கு பக்கத்து ஊரை சேர்ந்த வாலிபர் ஒருவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. அது நாளடைவில் கள்ளக்காதலாக மாறிய நிலையில் ரூபி அந்த இளைஞரை சந்தித்து அடிக்கடி உல்லாசமாக இருந்து வந்துள்ளார்.
இந்த கள்ளக்காதல் விவகாரம் மனோஜ்க்கு தெரிய வந்த நிலையில் மனைவியை கண்டித்துள்ளார். மனோஜிடம் மன்னிப்பு கேட்ட ரூபி இனி திருந்தி வாழ்வதாக கூறியுள்ளார். ஆனால் ரூபியின் பேச்சில் மனோஜ்க்கு நம்பிக்கை இல்லை.
ஒருநாள் மனோஜ் தான் வேலை விஷயமாக வெளியூர் செல்வதாக கூறி சென்றுள்ளார். இதை உல்லாசத்திற்கான வாய்ப்பாக கருதிய ரூபி தனது கள்ளக்காதலனை வீட்டிற்கே வர வைத்துள்ளார். இரவில் இருவரும் படுக்கையில் உல்லாசமாக இருந்தபோது, எதிர்பாராத திருப்பமாக மனோஜ் உள்ளே நுழைந்துள்ளார்.
அதை கண்டு அவர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். ஆனால் மனோஜ் சற்றும் முகம் காட்டாமல் வேகமாக அவர்களை படுக்கையறையில் வைத்து தாழிட்டு விட்டார். பின்னர் ரூபியின் குடும்பத்தை வர செய்து நடந்த விஷயங்களை கூறியுள்ளார்.
அதன்பின்னர், இனி அவளோடு என்னால் வாழ முடியாது. அவள் அவளுடைய கள்ளக்காதலனோடே வாழட்டும் என கூறிய மனோஜ் அவர்கள் இருவருக்கும் திருமணம் செய்து வைத்ததோடு, இனி தனக்கும், ரூபிக்கும் சம்மந்தம் இல்லை என எழுதி வாங்கிக் கொண்டு வீட்டை விட்டு அவர்களை அனுப்பிவிட்டார்.
கள்ளக்காதல் விவகாரம் என்றதும் ஆத்திரத்தில் குற்றம் செய்து ஜெயிலுக்கு போகாமல் சமயோஜிதமாக செயல்பட்டு தன்னை விரும்பாதவர்கள் தன்னுடன் இருக்க தேவையில்லை என்று முடிவெடுத்த மனோஜின் செயல் பலரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தியுள்ளது.
Edit by Prasanth.K