காவலுக்கு நின்ற நாயையே கவ்விச் சென்ற சிறுத்தை! - கூடலூரில் தொடரும் பீதி!

Prasanth Karthick

ஞாயிறு, 15 டிசம்பர் 2024 (09:23 IST)

நீலகிரி மாவட்டம் கூடலூர் பகுதியில் சிறுத்தையின் நடமாட்டம் தொடர்ந்து வருவதால் மக்கள் அச்சத்தில் உள்ளனர்.

 

 

நீலகிரி மாவட்டத்தில் உள்ள மலைப்பகுதியான கூடலூரில் உள்ள கிராமங்களில் அடிக்கடி யானைகள் புகுந்து விடுவது, சிறுத்தைகள் நடமாட்டம் என வன உயிர்களால் அச்சுறுத்தல் தொடர்ந்து இருந்து வருகிறது. இந்நிலையில் சளிவயல் மில்லிக்குன்னு பகுதியில் நேற்று முன் தினம் சிறுத்தை ஒன்று புகுந்துள்ளது.

 

நடு இரவில் கிராமத்தில் உலா வந்த சிறுத்தை அங்கிருந்த நாய் ஒன்றை கொன்று இழுத்துச் சென்றுள்ளது. இது அங்கிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியிருந்த நிலையில் மக்கள் அச்சத்தில் ஆழ்ந்துள்ளனர். மேலும் வனத்துறையினர் சிறுத்தைக்கு கூண்டு வைத்து விரைவில் பிடிக்க வேண்டும் என அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

 

Edit by Prasanth.K

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்